உக்ரைன் அதிபரை மீண்டும் சந்தித்த பிரதமர் மோடி.. மோதலுக்கு விரைவில் தீர்வு காண ஆதரவு என உறுதி
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்க் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, உக்ரைன் மோதலில் அமைதியான முறையில் விரைவாக தீர்வு காண சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்று உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் பங்கேற்றார். குவாட் கூட்டமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் அடுத்த மாநாட்டை இந்தியா நடத்துகிறது.

குவாட் கூட்டம் முடிந்த பிறகு நியூயார்க் நகரில் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல, இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் உரையாற்றினார். அதன் பிறகு, நியூயார்க்கில் உள்ள மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஏற்பாடு செய்த செய்த ரவுண்ட் டேபிள் மாநாடு நடந்தது. இதில், கூகுள் உள்பட 15 டாப் டெக் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு உலக தலைவர்களையும் சந்தித்தார். அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்தார். அண்மையில் பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் மெற்கொண்டு இருந்தார். அப்போது ஜெலன்ஸ்கியை மோடி சந்தித்து இருந்தார். அப்போது உக்ரைன் போர் விவகாரத்தில் விரைவில் தீர்வு காண்பது தொடர்பாகவும் பேசியிருந்தார்.
இந்த சூழலில் தற்போது மீண்டும் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, உக்ரைனில் நடக்கும் மோதலுக்கு விரைவில் தீர்வு காண இந்தியா ஆதரவு அளிக்கும். உக்ரைனில் அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலக மக்கள் தொகையில் 6 ல் ஒரு பங்கினரின் குரலை ஒலிக்க வந்துள்ளேன். மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் இல்லை. நமது கூட்டு பலத்தில் தான் உள்ளது. நிலையான வளர்ச்சிக்க்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில் மனித நலன், உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு முறையும் உறுதி செய்ய வேண்டும்' என்றார்.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications