ட்விட்டரில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட டாப் 10 பிரபலங்கள் யார் தெரியுமா? பிரதமர் மோடிக்கு இந்த இடமா..?
வாஷிங்டன் : உலகளவில் ட்விட்டரில் அதிக அளவில் ஃபாலோயர்களைக் கொண்ட பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைத்தளங்கள் இன்று நமது வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வருவது என்பது மிக முக்கியமாகவே உள்ளது.
சாதாரண அரட்டைகளுக்கு தொடங்கப்பட்ட ட்விட்டர் பல உலக நாடுகளின் தலைவர்கள் முதல் உள்ளூர் அதிகாரிகள் வரை தங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் அளவுக்கு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளதாக மாறிவிட்டது.

ட்விட்டர் வலைதளம்
இப்படி முக்கியத்துவம் பெற்ற ட்விட்டரில் பாலோயர்களை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. உலக தலைவர்கள், பிரபலங்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என லட்சக்கணக்கானோர் ட்விட்டரில் உள்ள நிலையில், ஃபாலோயர்களுக்காக பேக் ஐடிக்களும் ஆயிரக்கணக்கில் உலாவுகின்றன.

ஃபாலோயர் எண்ணிக்கை
இந்நிலையில் கோடிகளை செலவழித்து சிலர் போலியான ஃபாலோயர்களை உருவாக்குவதாக கூட குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் சாமானியர்களுக்கு அது சாத்தியம் கிடையாது. ட்விட்டரில் ஒரு அக்கவுண்ட்டை ஓபன் செய்துவிட்டு, யாராவது பாலோ செய்யமாட்டார்களா? என காத்திருக்க வேண்டியது தான்.

டாப் 10 பட்டியல்
இந்நிலையில் உலக அளவில் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிக ஃபாலோயர்களை கொண்டவர்களின் டாப் 10 பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்131.7 மில்லியன் ஃபாலோயர்களுடன் அமெரிக்காவின் 44வது அதிபரான பராக் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். 114.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரபல பாடகர் ஜஸ்டின் பைபர் இரண்டாவது இடத்திலும், பாடகி கேட்டி பெர்ரி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் பாடகி ரிஹானாவும், மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்திலும் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி
90.3 மில்லியன் ஃபாலோயர்களுடன் பாடகர் டெய்லர் ஸ்விப்ட் 6வது இடத்திலும், பிரபல தொழிலதிபரும் தற்போது டுவிட்டரை வாங்கியுள்ளவருமான எலான் மஸ்க் 84.9 மில்லியன் ஃபாலோயர்களுடன் 7-வது இடத்திலும் உள்ளார். பாடகியும் நடிகையுமான லேடி காகா 8வது இடத்திலும், பிரதமர் நரேந்திர மோடி 78.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் 9வது இடத்திலும் உள்ளார். பிரபல காமெடி நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான எல்லேன் டிஜெனிரோஸ் 77.5 மில்லயன் ஃபாலோயர்களுடன் 10வது இடத்திலும் உள்ளார்.
Recommended Video

டொனால்ட் டிரம்ப் நீக்கம்
அதே நேரத்தில் 88.8 மில்லியன் பாலோயர்களை பெற்றிருந்தாலும் ட்விட்டரில் இருந்து முடக்கி வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் 7வது இடத்தில் இருந்தாலும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இதேபோல் மற்றொரு பிரபலமான ஏரியானா கிராண்டேவும் அதிக ஃபாலோயர்களை பெற்றிருந்தாலும் இந்த பட்டியலில் இல்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications