வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் ஸ்பேஸ் சுற்றுலா.. ஏவுதளத்திற்கு 'கூலாக' சைக்கிளில் வந்த ரிச்சர்ட் பிரான்சன்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் யூனிட்டி 22 விண்கலம் மூலம் விண்வெளிக்கு புறப்படுவதற்கு முன், ஏவுதளத்திற்கு கூலாக சைக்கிளில் வந்த ரிச்சர்ட் பிரான்சனின் வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

    விண்வெளி சென்ற Richard Branson-க்கும் Tamilnadu-க்கும் இருக்கும் பந்தம்

    மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை உலகிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் முயன்று வருகிறது. அதில் முக்கியமான நிறுவனம் என்றால் அது விர்ஜின் கேலடிக்.

    பிரிட்டன் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விர்ஜின் கேலடிக் இதுவரை நடத்திய சோதனைகள் வெற்றிகரமாகவே இருந்துள்ளது.

    விர்ஜின் கேலடிக்.. சாத்தியமாகும் விண்வெளி சுற்றுலா- வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய யூனிட்டி22 விண்கலம்விர்ஜின் கேலடிக்.. சாத்தியமாகும் விண்வெளி சுற்றுலா- வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய யூனிட்டி22 விண்கலம்

     விண்வெளி பயணம்

    விண்வெளி பயணம்

    இந்நிலையில், சோதனை முறையில் யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் இந்திய நேரப்படி இரவு 8 மணியளவில் தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கினார். ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா உட்பட மொத்தம் ஆறு பேர் இந்த விண்வெளி பயணத்தில் இடம் பெற்றிருந்தனர். முதலில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இவர்கள் விண்வெளிக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவதாக இருந்தனர்.

     காலதாமதம்

    காலதாமதம்

    இருப்பினும், இரவு இருந்த மோசமான வானிலை காரணமாக செட்அப் பணிகளைத் தொடங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 90 நிமிடங்கள் தாமதமாகவே விண்வெளி பயணம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 70 வயதான ரிச்சர்ட் பிரான்சன் விமானம் ஏவுதளத்திற்கு வந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

     சைகிள் பயணம்

    சைகிள் பயணம்

    பிரிட்டன் நாட்டின் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்குத் தனது பயணத்தைத் தொடங்க சைக்கிளில் ஏவுதளத்திற்குச் சென்றுள்ளார். நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள ஸ்பேஸ்ஸ்போர்ட் ஆப் அமெரிக்கா என்ற ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது.

    ஸ்பேஸ் சுற்றுலா

    இதுபோன்ற ஸ்பேஸ் சுற்றுலா வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கும். இந்த பயணத்தில் இதில் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட மொத்த 6 பேர் விண்வெளிக்குச் செல்கின்றனர். இவர்கள் இருக்கும் விண்கலம் இரட்டை எஞ்சின் கொண்ட கேரியர் விமானம் மூலம் 50 ஆயிரம் அடி உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து இவர்கள் இருக்கும் விண்கலம் விடுவிக்கப்படும். இருப்பினும், இது டெஸ்ட் விமானம் தான்.இது முழுமையாக விண்வெளிக்கு சென்றுவிடாது, 85-90 கிமீ உயரம் வரை மட்டும் செல்லும்.

    English summary
    Ahead of space travel Richard Branson arrives at the spaceport on his bicycle. Virgin Galactic passenger rocket plane and soar more than 50 miles (80 km) above the New Mexico desert in the vehicle's first fully crewed test flight to the edge of space.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X