Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி.. தாக்குதல் நடத்திய நபரை தேடும் போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

வாஷ்ங்டன்: அமெரிக்காவின் ஓஹியோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. பொது இடங்கள், மக்கள் அதிகம் உள்ள இடங்களில் நடத்தப்படும் இத்தகைய கொடூர தாக்குதல்களால் அங்குள்ள மக்கள் மத்தியில் பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க அரசு துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும் இது போன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை.

 4 பேர் பலி

4 பேர் பலி

அந்த வகையில் அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள பட்லர் டவுன்ஷிப் பகுதியில் நேற்று பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்லர் டவுன்ஷிப் பகுதியில் 8,000 க்கும் குறைவான மக்களை கொண்ட ஒரு சிறிய நகரமாகும். இங்கு வழக்கம்போல் மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுப்படிருந்தனர். அப்போது நேற்று மதிய நேரத்தில் துப்பாக்கியோடு வந்த நபர் ஒருவர் திடீரென அவர் கண் முன் தென்படும் மக்களை சரமாரியாக சுட்டுள்ளார்.

 சரமாரி துப்பாக்கி சூடு

சரமாரி துப்பாக்கி சூடு

கண்மூடித்தனமாக அந்த நபர் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும் ஒருசிலரின் உடம்பில் குண்டு பாய்ந்தது. பலர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர் அதன் அருகே உள்ள மற்றொரு பகுதியில் அந்த நபர் துப்பாக்கியால் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதிலும் அப்பாவி மக்கள் மீது குண்டு பாய்ந்துள்ளது. பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து அறிந்ததும் அப்பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

 வெள்ளை நிற காரில் . .

வெள்ளை நிற காரில் . .

ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து காரில் தப்பிவிட்டார். இந்த நிலையில் சில மணி நேரத்தில் இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பட்லர் டவுன்ஷிப் போலீஸ் தலைவர் ஜான் போர்ட்டர் என்பவர் கூறுகையில், ''ஸ்டீபன் மார்லோ என்பவர் தான் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவரை சரியாக அடையாளப்படுத்த வேண்டும் என்றால் கிட்டத்தட்ட அவர் 5'11 அடி உயரம் கொண்டவராகவும், சுமார் 160 பவுண்டுகள் எடை கொண்டவராகவும் இருப்பார். மேலும் பழுப்பு நிற முடியுடன் காணப்பட்டார்.

 மஞ்சள் நிற டி-ஷர்ட்

மஞ்சள் நிற டி-ஷர்ட்

கிட்டத்தட்ட அவருக்கு 39 வயது இருக்கும். ஸ்டீபன் மார்லோ, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டபோது மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்திருந்தார். அவர் ஒரு ஆபத்தான நபர். துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு அவர் ஒரு வெள்ளை நிற காரில் தப்பி சென்றுள்ளார். விரைவில் நாங்கள் அவரை கண்டுபிடித்து விடுவோம். தற்போது அவர் ஓஹியோவிலிருந்து தப்பிச் சென்றிருக்கலாம்" என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சமீபத்தில் இப்பகுதியில் நடந்த முதல் வன்முறை சம்பவம் இதுவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+