கண்ட்ரோலை இழந்த ஸ்டார்ஷிப்.. இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கிய எலான் மஸ்கின் ராக்கெட்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சோதனைக்காக அனுப்பிய ராக்கெட் 30 நிமிடங்களில் கண்ட்ரோலை இழந்து தாறுமாறாகச் சுழல தொடங்கியது. பிறகு சில நிமிடங்களில் அது அதீத வேகத்தில் இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது. எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 3வது தோல்விகரமான திட்டம் இதுவாகும்.
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில் முக்கியமானது தான் ஸ்பேஸ்எக்ஸ்.. சாட்டிலைட்களை ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்புவது, விண்வெளி சுற்றுலா ஆகிய சேவைகளை ஸ்பேஸ்எக்ஸ் வழங்கி வருகிறது. நாசா கூட ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.

பின்னடைவு
ஒப்பீட்டளவில் மற்ற தனியார் ஸ்பேஸ் நிறுவனங்களை விட எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், சமீப காலமாகவே அது சில பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. இன்று புதன்கிழமை, ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் திட்டம் மற்றொரு பின்னடைவை எதிர்கொண்டது.
இன்று அதன் ஒன்பதாவது சோதனையில் புறப்பட்டு சுமார் 30 நிமிடங்களில் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அது சில நிமிடங்களில் இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது. அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸிலிருந்து புறப்பட்ட இந்த ராக்கெட், ஸ்டார்ஷிப்பின் சுற்றுப்பாதை மட்டுமின்றி மீண்டும் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பும் திறனை நிரூபிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
சிறப்பம்சம்
அதாவது அது சோதனை பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பத்திரமாகப் பூமியில் இறங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிறப்பம்சமே இதுதான். அவர்களின் ராக்கெட்டை மீண்டும் பூமியில் தரையிறங்கும் என்பதால் அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் செலவும் 40% வரை குறையும். ஆனால், இன்றைய திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.
இந்த ஸ்டார்ஷிப் எட்டு ஸ்டார்லிங்க் சிமுலேட்டர் செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது.. வரும் காலங்களில் மேற்கொள்ளும் செயற்கைக்கோள் ஏவுதல்கள் மற்றும் தொலைதூர விண்வெளி பயணங்களுக்கான சோதனையின் பகுதியாக அந்த சிமுலேட்டர் சாட்டிலைட்களை சுற்றுப்பாதையில் நிறுத்துவதே திட்டமாகும்.
என்ன நடந்தது
இருப்பினும், செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடியாமல் ஸ்டார்ஷிப் கட்டுப்பாட்டை இழந்தது. அது திடீரென அப்படியே தாறுமாறாக சுழலத் தொடங்கியது. ஸ்டார்ஷிப் இன்ஜினியர்களும் ராக்கெட் மீதான கட்டுப்பாட்டை இழந்தனர். இதையடுத்து சில நிமிடங்களிலேயே அது அதீத வேகத்தில் இந்தியப் பெருங்கடலில் மோதியது.
மூன்றாவது முறை
இந்த ஆண்டு ஸ்டார்ஷிப் திட்டம் தோல்வி அடைவது இது மூன்றாவது முறையாகும். உலகின் மிக பெரிய தனியார் ராக்கெட் நிறுவனமாக இருந்தாலும் விண்வெளியில் ராக்கெட் அனுப்புவது எந்தளவுக்குச் சிக்கலான ஒன்று என்பதையே இது காட்டுகிறது. அதேநேரம் ஸ்பேஸ்எக்ஸ் திட்டம் தோல்வியைத் தழுவினாலும் கூட இதன் மூலம் கிடைக்கும் டேட்டா அந்நிறுவனத்திற்கு மிகப் பெரியளவில் உதவும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வரும் காலங்களில் சந்திரன், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், இந்த டேட்டா மிகப் பெரியளவில் கை கொடுக்கும்.
அதேபோல நாசாவும் கூட ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் மீண்டும் சந்திரன் மீதான ஆய்வுகளைத் தீவிரப்படுத்த இருக்கிறது. இதனால் நாசாவும் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்கள் எந்தளவுக்குத் திறனைக் கொண்டு இருக்கிறது என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications