வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விகார சிரிப்பு.. “பேய்”போல் தெரியும் சூரியன்! நாசா வெளியிட்ட படம் -விண்வெளியில் ஹாலோவீன் பண்டிகையா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நேற்று உலகம் முழுவதும் பேய் பண்டிகை என்று அழைக்கப்படும் ஹாலோவின் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தனது ஸ்டைலில் பேய்போல் தெரியும் சூரியனின் படத்தை வெளியிட்டு இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த உலக புகழ்பெற்ற நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளியில் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. நாசாவுக்கு கீழ் விண்வெளியின் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்ய பல்வேறு துணை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அப்படிப்பட்ட ஒரு துணை நிறுவனம்தான் சோலா டைனமிக்ஸ் ஆய்வு நிறுவனம். அந்த நிறுவனம் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், அதற்குள் புதைந்திருக்கும் அறிவியல் மர்மங்கள், அதன் தோற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அடிக்கடி பூமிக்கு விசிட் அடிக்கும் ஏலியன்கள்? கண்காணிக்க தனி டீமை களமிறக்கிய நாசா! விலகுமா மர்மம்அடிக்கடி பூமிக்கு விசிட் அடிக்கும் ஏலியன்கள்? கண்காணிக்க தனி டீமை களமிறக்கிய நாசா! விலகுமா மர்மம்

 சூரியனின் படம்

சூரியனின் படம்

SDO என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரியனின் வித்தியாசமான படத்தை படம்பிடித்தது. அதில் வழக்கமாக நாம் பார்க்கும் சூரியன்போல் இல்லாமல் நெருப்பு வளையம்போன்றும் அதற்குள் ஆங்காங்கே தீ எரிவதைபோன்றும் காணப்பட்டது.

ஹாலோவின் தோற்றம்

ஹாலோவின் தோற்றம்

171 ஆங்ஸ்ட்ராம்ஸ் மற்றும் 193 ஆங்ஸ்ட்ராம்ஸ் என 2 வகையான அல்டிரா வைலட் கதிர்வீச்சுகளை இணைத்து காட்டும் இந்த புகைப்படம் ஹாலோவீன் (பேய்) போன்ற தோற்றத்தை காட்டும் என நாசா தெரிவித்து உள்ளது. அந்த படத்தில் நெருப்புபோல் காட்சிதரும் பகுதிகள் சூரிய மண்டலத்தின் ஆழமான, சிக்கலான காந்த அழுத்தங்களை கொண்டவை.

நாசா ஸ்டைலில் ஹாலோவின்

நாசா ஸ்டைலில் ஹாலோவின்

பிரம்மிக்கவும், பயமுறுத்தவும் வைக்கும் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் நாசா, "நீ சுண்டைக்காய்போல் இருக்கிறாய். சொல்லப்போனால் சுண்டைக்காய்தான்" என்று குறிப்பிட்டு ஹாலோவீன் பூசணிக்காய் ஸ்மைலியை சேர்த்து குறிப்பிட்டு இருக்கிறது.

ஹாலோவீன் பூசணிக்காய்

ஹாலோவீன் பூசணிக்காய்

இந்த சூரியனின் படத்தை சோலார் ஜாக் ஓ லாட்டர்ன் (ஹாலோவீன் பூசணிக்காய்) என்று அழைக்கும் நாசா, அந்த படத்தில் கோரமான சிரிப்பை போன்ற பகுதிகள் எரிந்துகொண்டிருக்கும் இடமாகும். இந்த இடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு வெளிச்சமும், ஆற்றலும் செல்கிறது. இதே SDO கடந்த 2010 ஆம் ஆண்டு சூரியன் கண் சிமிட்டும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது.

நாசா விளக்கம்

நாசா விளக்கம்

இந்த புகைப்படங்களின் மூலம் சூரிய மண்டலம், சூரிய கதிர்கள், சூரிய வளைவு, அதன் துளைகள், சூரியனின் உள்பகுதி, சூரியனின் காந்த சக்தி, ஆற்றல் வெளிபாடு குறித்து அறிந்துகொள்ள முடிகிறது. இந்த சூரியனின் படத்தில் பளிச்சென தெரியும் இடங்கள் 2 கண்கள் மற்றும் விகாரமான சிரிப்பை காட்டி ஹாலோவின் பூசணிக்காயான ஹேக் ஓ லேட்டர்ன் போல் காட்சி தருகிறது.

இருளான பகுதிகள்

இருளான பகுதிகள்

சூரியனின் இதர பகுதிகள் இருட்டாகவே இருக்கும். வட்ட வடிவில் இருக்கும் ஆரஞ்சு நிறப்பகுதி என்பது விண்வெளியில் எவ்வளவு இருளான பகுதியில் சூரியன் உள்ளது என்பதை காடுகிறது." என்று விளக்கி இருக்கிறது. ஹாலோவீன் பண்டிகை ஆண்டுதோறும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

English summary
As the festival of Haloween, known as the Ghost Festival, was celebrated yesterday, the United States' NASA Space Research Center has released a picture of the sun that looks like a ghost in its own style.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X