நேரலையில் பேசிய செய்தியாளரிடம் குட்டி சேட்டை செய்த யானைக்குட்டி.. ரசிக்க வைத்த வீடியோ
வாஷிங்டன்: நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த செய்தியாளரிடம் 'தன்னையும் வீடியோ பதிவு செய்யுங்கள்' என்ற தொனியில் யானைக்குட்டி ஒன்று சேட்டை செய்யும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
வனவிலங்குகள் பற்றிய வீடியோவுக்கு இணையதளத்தில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
வனத்திற்குள் விலங்குகள் செய்யும் சேட்டைகள், உயிரியல் காப்பகத்தில் அதன் காப்பாளர்களிடம் வெளிக்காட்டும் அன்பு என விலங்குகளின் சேட்டைகளை நாள் முழுவதும் ரசித்துக் கொண்டு இருக்கலாம்.

இணையத்தில் பரவும் வீடியோ
எவ்வளவு நெருக்கடியில் இருந்தாலும் வன விலங்குகள் பற்றிய வீடியோக்கள் மனதை இலகுவாக்கிடும். இதனாலேயே டிஸ்கவரி போன்ற வைல்டு லைப் சேனல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இணையதளத்திலும் வீட்டின் செல்லப்பிராணிகள் வீடியோ மட்டும் இன்றி வன விலங்குகள் செய்யும் அதகளங்கள் குறித்த வீடியோக்களும் வேகமாக பரவி ரசிக்க வைத்து விடுகின்றன.

யானைக்கூட்டங்களுக்கு மத்தியில்..
குறிப்பாக மனிதர்களுடன் நெருக்கமாக பழகும் யானை குறித்த வீடியோக்கள் எல்லாம் பார்த்து ரசிக்காதவரே இல்லை என்று சொல்லிவிடலாம். அப்படியான ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் செய்தியளர் ஒருவர் கேமரா முன்பாக நின்று பார்த்து செய்திகளை வழங்கி வருகிறார். வனவிலங்குகள் பற்றி கவர் செய்து கொண்டிருந்த செய்தியாளர், செய்தி வழங்கும் விதம் தனித்தன்மையாக தெரியவேண்டும் என்பதற்காக யானைக்கூட்டங்களுக்கு மத்தியில் நின்ற பேசிக்கொண்டு இருந்தார்.

முகத்தில் தும்பிக்கையை போட்டு..
அவருக்கு மிக நெருக்கமாக நிற்கும் யானைக்குட்டிகள் ஒன்றுக்கொன்று உரசியபடி அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டு இருந்தன. அதில் ஒரு சேட்டைக்கார யானைக்குட்டி... நம்மை கேமராவில் காண்பிக்க மாட்டேன்கிறானே என்ற தொனியில் தனது தும்பிக்கையை எடுத்து செய்தியை வழங்கிய செய்தியாளரின் தலையில் உரசியது. அப்படியே அவரது முகத்தில் தும்பிக்கையை போட்டு செய்தியாளரை பேசவிடாமல் நிறுத்தி விட்டது.

மனதை ரசிக்கும் வகையில்..
செய்தியாளரும் யானை செய்த சேட்டையை ரசித்தபடி சற்று விலகிக் கொள்கிறார். மனதை ரசிக்க வைக்கும் வகையிலான இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. sheldricktrust- என்ற இணைய பக்கத்தில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.

நெட்டிசன்கள் பாராட்டு
அனைவரும் ஸ்டார் ஆக விரும்புகின்றனர். ஆல்வின் செய்தி வழங்குவதை பார்த்து ஈர்க்கப்பட்ட கிண்டனி (யானைக்குட்டி)யும் பிரபலம் அடைய முயற்சிக்கிறது" என்ற கேப்ஷனுடன் இந்த பதிவு போடப்பட்டுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை ரசித்து பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், துணிச்சலாக யானைக்கூட்டங்களுக்கு மத்தியில் நிகழ்ச்சியை வழங்கும் செய்தியாளரையும் நெட்டிசன்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications