கல்யாண வீட்டில் எக்ஸ்ட்ரா ஒரு கேக் சாப்பிட்டது குத்தமா..ரூ333 பில் போட்ட மணமக்கள்..வாலிபர் அதிர்ச்சி
வாஷிங்டன்: கல்யாண வீட்டில் போடப்பட்ட விருந்து சாப்பாட்டில் எக்ஸ்ட்ரா ஒரு கேக் வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்ற வாலிபருக்கு மறுநாள் வாட்ஸ்-அப்பில் மணமக்கள் 333 ரூபாய் பில் அனுப்பியுள்ளனர். இது தொடர்பான வாட்ஸ்-அப் மெசேஜ் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
திருமண நிகழ்ச்சிகளில் மணமக்களுக்கு அடுத்து அதிகம் பேசப்படுவது அங்கு வைக்கப்படும் விருந்து தான்.
சிக்கன், மட்டன் என வரவேற்பு நிகழ்ச்சிகளில் போடப்படும் உணவுகள் பல காலத்திற்கு பேர் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று மண வீட்டார் சிறப்பு கவனம் செலுத்தி விருந்து வைப்பர்.

திருமண வீட்டு விருந்து
இதை வயிறார சாப்பிட்டு மொய் வைத்துவிட்டு செல்வதுதான் காலம் காலமாக இந்தியா போன்ற நாடுகளில் கடைபிடிக்கும் நடைமுறையாக உள்ளது. தங்களது தகுதிகளுக்கு ஏற்ப திருமண வீட்டினர் விருந்து வைத்து அசத்துவர். இதேபோல் விதவிதமான சாப்பாடுகளை வெளுத்துவிட்டு தங்கள் வசதிக்கேற்ப மொய் பணத்தையும் கொடுத்து விட்டு மணமக்களை மனதார வாழ்த்திவிட்டு செல்வதுதான் நம்ம ஊர் நடைமுறை.

கல்யாண விருந்தா?.. வசூல் விருந்தா?.
ஆனால், நீங்கள் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு பணத்தையும் வாங்கிவிட்டு கூடுதலாக சாப்பிட்டால் அதற்காக வீட்டிற்கு பில் அனுப்பி வசூல் செய்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்... என்ன கல்யாண விருந்தா?... இல்லை வசூல் விருந்தா?... என கேள்வி கேட்போம் தானே... இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பதுதான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

கூடுதலகாக ஒரு பீஸ் கேக்
அதாவது, திருமண வீட்டில் வழங்கப்பட்ட கேக் துண்டை விட கூடுதலகாக ஒரு பீஸ் எடுத்து சாப்பிட்ட ஒரு நபருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து கறார் காட்டியிருக்கிறது புதுமண தம்பதி... கூடுதலாக ஒரு கேக் சாப்பிட்டது குத்தமாடா?... என மனம் வெதும்பிய அந்த நபர் தனது அனுபவங்களை பகிர்ந்ததுதான் நெட்டிசன்கள் மத்தியில் ஜாலியாக பரவிக் கொண்டு இருக்கிறது.

என்னை அறியாமல் எடுத்துவிட்டேன்
இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் கூறுகையில், ''திருமண வீட்டிற்கு வந்த விருந்தினர் அனைவரிடமும் அங்கு கொடுக்கப்படும் கேக்கிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால், நான் ஒரு கேக்கிற்கு பணம் செலுத்திவிட்டு கூடுதலாக ஒரு கேக் துண்டை என்னை அறியாமல் எடுத்துவிட்டேன். இது குறித்து எனக்கு நினைவும் இல்லை. ஆனால், வீட்டிற்கு வந்த பிறகு புதிதாக திருமணம் முடித்துக்கொண்ட புதுமண தம்பதியிடம் இருந்து எனக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது.

வாட்ஸ்-அப்பில் மெசேஜ்
சரி ஏதேனும் வாழ்த்து செய்தியை அனுப்பியிருப்பர்கள் என்று எண்ணி நானும் மெசேஜ்ஜை படித்து பார்த்தேன். ஆனால், அதில் நீங்கள் கூடுதலாக ஒரு கேக் துண்டை சாப்பிட்டதை நாங்கள் சிசிடிவியில் பார்த்தோம். எனவே அதற்குரிய கட்டணமான 3.6 யூரோ (நம்ம ஊர் மதிப்பில் 333) செலுத்துங்கள் என கூறியிருந்தது'' என்று அவர் தெரிவித்தார். இந்த திருமணத்திற்கு சென்று தயவு செய்து கிப்ட் எதையும் கொடுத்து விடாதீர்கள் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications