வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலக நாடுகளின் சந்தேகம் சரிதானோ?.. மனிதன் உருவாக்கியது தான் கொரோனா வைரஸ்..ஒரே போடாக போட்ட விஞ்ஞானி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல.. மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியதாக அங்கு பணியாற்றிய விஞ்ஞானி வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளும் பொருளாதர பாதிப்புகளையும் ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏறத்தாழ 2 ஆண்டுகள் முற்றிலும் முடக்கிப்போட்ட கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது.

2019 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பரவி உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால், ஊரடங்கு, சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்திய சர்வதேச நாடுகள், பாடாத பாடு பட்டு தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்தின.

ஆர்டிஓ ஆபிஸுக்கே போகாம.. வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸை புதுப்பிப்பது எப்படி?ஆர்டிஓ ஆபிஸுக்கே போகாம.. வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸை புதுப்பிப்பது எப்படி?

சீனாவில் கொரோனா

சீனாவில் கொரோனா

தற்போது தடுப்பூசியும் வந்துவிட்டதால் கொரோனா வைரசின் வீரியம் குறைந்துவிட்டது. கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்ட பல நாடுகள் கட்டுப்பாடுகளை எல்லாம் தளர்த்திவிட்டன. இந்தியாவிலும் கூட கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுவிட்டன. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை ஏறத்தாழ எட்டி விட்டது. கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றிய சீனாவில் தான் தற்போது தொற்று பரவல் கட்டுக்கடங்காமால் பரவி திணறடித்து வருகிறது.

ஆய்வகத்தில் இருந்துதான் பரவியதா?

ஆய்வகத்தில் இருந்துதான் பரவியதா?

கொரோனா வைரஸ் முதன் முதலாக வெளிப்பட்ட போதே உலக நாடுகள் பலவும் சீனா மீது சந்தேகக் கண் எழுப்பியது. குறிப்பாக அமெரிக்கா, சீனா மீது கடும் சந்தேகம் எழுப்பியது. ஏனென்றால், இந்த வைரஸ் முதன் முதலாக வெளிப்பட்ட உகான் நகரில் தான் சீனாவின் உயிரியல் ஆய்வகம் ஒன்று உள்ளது. இதனால் அந்த ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியிருக்கலாம் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

மனிதனால் உருவாக்கப்பட்டது

மனிதனால் உருவாக்கப்பட்டது

கொரோனாவை பரவ விட்டதற்காக சீனாவிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை கூட நடத்தப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசாரணையின் அறிக்கைகள் அமையவில்லை. இந்த நிலையில், கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்றும் மனிதனால் உருவாக்கப்பட்டது எனவும் உகானில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றிய அமெரிக்க விஞ்ஞானி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார்.

''உகான் பற்றிய உண்மை

''உகான் பற்றிய உண்மை"

இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த அந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் ''உகான் பற்றிய உண்மை" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் தான் இந்த தகவலை கூறியிருக்கிறார். ஆண்ட்ரூ ஹப் கூறும் போது, சீன அரசின் நிதி உதவியுடன் இயங்கும் ஆய்வகமாக உகான் இன்ஸ்டிடியூட் வைராலாஜி (WIV) - ல் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளியேறியது. அங்கு போதிய பாதுகாப்புகள் இன்றி வைரஸ் பற்றிய ஆய்வுகள் நடந்து வந்தன. அமெரிக்க அரசும் அளித்த நிதி உதவியில்தான் இது நடத்தப்பட்டது" என்றார்.

திட்டவட்டமாக மறுப்பு

திட்டவட்டமாக மறுப்பு

கொரோனா வைரஸ்கள் வெளவ்வால்களிடம் இருந்து பரவியதா? விலங்ககள் மூலமாக மனிதர்களிடம் பரவியதா என்ற சந்தேகங்கள் இன்னும் கூட முழுமையாக நிவர்த்தி ஆகாத நிலையில்,தற்போது மனிதன் தான் கொரோனா வைரசை உருவாக்கியதாக அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்டு இருக்கும் முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடம் குறித்த பலவிதமான சந்தேகங்களும் கருத்துக்களும் பரவி வந்தாலும் சீன அதிகாரிகளோ..ஆய்வக அதிகாரிகளோ இது தொடர்பான தகவல்களை திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

English summary
The information published by the scientist who worked there has created a sensation that the corona virus is not natural.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X