வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் யார்.. 1984 முதல் கரெக்டாக கணிக்கும் பேராசிரியர்.. இப்போ என்ன சொன்னார் தெரியுமா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ரிசல்ட் தினத்தை விடவும், ஆலன் லிக்ட்மேன் என்ன சொல்லப்போகிறார் என்றுதான் காத்துக் கிடந்தது அமெரிக்கா. இதோ.. இப்போது, அதிபர் தேர்தல் 'ரிசல்ட்' வந்துவிட்டது.

தொழிலால், வரலாற்று பேராசிரியர். ஆனால், இவர் புகழ்பெற்று, வரலாறு படைத்தது என்னவோ இவரது அதிபர் தேர்தல் முடிவு கணிப்புகளால்தான். பின்ன சும்மாவா.. 1984ம் ஆண்டு முதலே, கரெக்டாக அனைத்து அதிபர் தேர்தல் முடிவுகளையும் கணித்து வருகிறார் இந்த மனிதர்.

இவர் ஏதோ கண்ணை மூடிக் கொண்டு, கணிப்புகளை, அடித்துவிடுவது கிடையாது. இதற்கு அவன் பயன்படுத்தும் மெத்தட், '13 முக்கிய விஷயங்கள்', அதாவது '13 keys'.

கொரோனாவில் இருந்து மீண்ட உடனே பிரச்சாரத்தை துவக்கிய டிரம்ப்.. ஏற்படுத்திய அபாயம் கொரோனாவில் இருந்து மீண்ட உடனே பிரச்சாரத்தை துவக்கிய டிரம்ப்.. ஏற்படுத்திய அபாயம்

13 விஷயங்கள்

13 விஷயங்கள்

அதிபர் வேட்பாளரின் பிரபல்யம், அவரது வெளியுறவு கொள்கைகள், அவரின் சாதனைகள் உட்பட 13 முக்கிய விஷயங்களுக்கு, எஸ் அல்லது நோ என்று பதில் கூறி, விடைகளை கண்டுபிடிப்பாராம். இப்போதும் அவரிடம்தான் ஊடகங்கள் ஓடிப் போய் கருத்து கேட்டுள்ளன. அவர் சொன்ன பதில்.. என்ன வென்றால், ட்ரம்ப் பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு கிளம்ப வேண்டியதுதானாம். ஜோ பிடன்தான் புதிய அதிபர் என்று சொல்லிவிட்டார் நம்ம புரபசர்.

டொனால்ட் ட்ரம்ப் தோற்பார்

டொனால்ட் ட்ரம்ப் தோற்பார்

13 பாயிண்டில், 7 பாயிண்ட் ஜோ பிடனுக்கு சாதகமாக இருக்கிறது. 6 பாயிண்ட் டிரம்புக்கு சாதகமாக இருக்கிறது. இது சிறு வித்தியாசம்தான் என்பதால் அமெரிக்க அதிபர் தேர்தல் கடும் போட்டியோடு இருப்பது மட்டும் தெளிவாகிறது.

சரியான கணிப்புகள்

சரியான கணிப்புகள்

1984ல் ரொனால்ட் ரீகன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு அதிபர் தேர்தலின்போதும் வெற்றியாளரை இவர் சரியாக கணித்துள்ளார் என்பதால்தான் ஆலன் லிக்ட்மேன் கணிப்புக்கு இவ்வளவு மவுசு.

ஒரு சிறிய தடுமாற்றம்

ஒரு சிறிய தடுமாற்றம்

இருந்தாலும், ஒருமுறை மட்டும் கணிப்பில் சின்ன தடுமாற்றம் இருந்தது. 2000மாவது ஆண்டில், ஜார்ஜ் டபிள்யூ.புஷ் தோற்பார், ஜனநாயக கட்சி வேட்பாளர் அல் கோரே வெல்வார் என்று கணித்தார் ஆலன் லிக்ட்மேன். இதில் பாதி வெற்றி கிடைத்தது. அதாவது, மக்களின் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தது அல் கோரேவுக்குத்தான். ஆனால் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைவாக போனதால் புஷ் ஜெயித்தார். மற்றபடி எல்லாமே துல்லியம்தான்.

English summary
Allan Lichtman, meet the The man who has correctly predicted US election since 1984.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X