US: ஈரானின் இதயத்தில் அடித்த டிரம்ப்.. கெஷ்ம் தீவில் அமெரிக்கா திடீர் தாக்குதல்! தீவிரமாகிறதா போர்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் முடிந்த பிறகு ஈரான் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம் என்று கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் பரவி வரும் நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவு மீது ரகசியமாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள இந்த தீவில் பல்வேறு இடங்களில் வெடிச்சதம் கேட்டுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 9 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிந்த பிறகு ஈரான் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானது.

US launch secret strikes on Iran Qeshm Island renewed tensions in Middle east

ஈரான் மீது திடீர் தாக்குதல்

இதனால், கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா திடீரென தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானுடன் ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் கூறிய நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியின் படி, கெஷ்ம் தீவில் சிறிய அளவில் தாக்குதல் நடத்தியதாகவும், மீண்டும் ஈரான் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தலாம் என்ற தோற்றம் ஏற்படாமல் இருக்க இவற்றை ரகசியமாக நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஷ்ம் தீவை குறி வைத்தது ஏன்?

கெஷ்ம் தீவு என்பது ஹார்முஸ் ஜலசந்திக்கும் மிக அருகில் உள்ளது. இந்த தீவுகளில் ஏராளமான பாறைகள் மறைவிடங்கள் உள்ளன. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றை ஈரான், இந்த தீவில் உள்ள மலைக் குகைகளிலும் நிலத்தடித் தளங்களிலும் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த தீவின் பாறை அமைப்புகளைப் பயன்படுத்தி, ஏராளமான நிலத்தடி ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளது. எனவேதான், கெஷ்ம் தீவை அமெரிக்கா குறிவைத்து இருப்பது ஈரானுக்கு விடுத்த பெரும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று டிரம்ப் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா?

இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறீர்களா? என்று கேட்டதற்கும் நோ என்று பதிலளித்த டிரம்ப், தற்போது திடீரென தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி அருகே 3 அமெரிக்க ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரானும் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+