கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்டு.. சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து பல்ப் வாங்கிய நபர்..தவறுதலாக எக்ஸ்ரே படம்
வாஷிங்டன்: கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்டுகளை தானே அச்சிட்டு நண்பர்களுக்கு அனுப்பி அசத்த முயன்ற அமெரிக்காவை சேர்ந்த டன் ஒயிட் என்பவர் தவறுதலாக தனது செல்போனில் வைத்திருந்த டெண்டல் எக்ஸ் ரே படத்தை அப்லோடு செய்து 90 கார்டுகளை பிரிண்ட் போட்டு இருக்கிறார். கவனக்குறைவால் நடந்த தவறு குறித்து தனது ட்விட்டரில் இந்த கார்டை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
பண்டிகை காலங்கள், திருவிழாக்கள் வந்துவிட்டால் தெரிந்த நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
முன்பெல்லாம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை கொண்டாட்டங்களின் போது தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு கிரீட்டிங்ஸ் கார்டு அனுப்பி வாழ்த்துக்களை பகிர்வது உண்டு. இந்த பழக்கம் எல்லாம் 90 கிட்ஸ்கள் சிறுவர்களாக இருந்த காலத்தோடு ஏறத்தாழ குறைந்துவிட்டது.

கிரீட்டிங்ஸ் கார்டு
வித விதமான கிரிட்டீங் கார்டுகளை அனுப்பி தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பண்டிகை கால வாழ்த்துக்களை பகிர்வதற்காகவே கடைகளில் பெரும் கூட்டம் அலைமோதிய நாட்கள் கூட இருந்தது உண்டு. தற்போதைய நவீன ஸ்மார்ட் உலகில் இந்த பழக்கம் எல்லாம் குறைந்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதனால், வாழ்த்துக்களை பகிர்வதற்கான கிரீட்டிங்ஸ் கார்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது.

நண்பர்களுக்கு அனுப்ப திட்டம்
இருந்தாலும் ஒருசிலர் இன்றளவும் கிரீட்டிங்ஸ் கார்டுகளை அனுப்பும் பழக்கத்தை கைவிடாமல் தொடர்வதாகக் கூட சொல்லப்படுகிறது. இதேபோலத்தான் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டன் ஒயிட் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கிறிஸ்துமஸ் கார்ட்ஸ் பிரிண்ட் செய்து தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்ப சூப்பர் பிளான் ஒன்றை போட்டு இருக்கிறார். ஆனால், அவரது கவனக்குறைவு..கிறிஸ்துமஸ் பண்டிகையை மறக்க முடியாத அளவுக்கு சுவாரசியமாக மாற்றி விட்டு இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

டெண்டல் எக்ஸ் ரே
கலிபோர்னியாவை சேர்ந்த டன் ஒயிட் கிறிஸ்துமஸ் கிரீட்டிங்ஸ் கார்டுகளை தானே தயாரித்து அனுப்ப முடிவு செய்து இருக்கிறார். இதற்காக செல்போன் செயலி மூலமாக தனது செல்போனில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த கிறிஸ்துமஸ் மற்றும் கேக் தொடர்பான படங்களை பதிவேற்றம் செய்து பிரிண்ட் எடுக்க திட்டம் தீட்டியிருக்கிறார். தான் நினைத்தபடியே அனைத்தும் நடந்து விட்டதாக கருதி 90 கார்டுகளை பிரிண்ட்டும் எடுத்து விட்டாராம். ஆனால், பிரிண்ட் எடுத்த கார்டுகளை பார்த்த பிறகே கிறிஸ்துமஸ் கிரீட்டிங்கில் தனது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எடுத்து இருந்த 'டெண்டல் எக்ஸ் ரே' படத்தை தவறுதலாக பதிவேற்றம் செய்து இருந்ததை கவனித்து இருக்கிறார்.

பச்சை நிற வண்ணத்தை அடித்து விடுங்கள்
ஆசை ஆசையாய் உருவாக்க நினைத்த கிறிஸ்துமஸ் கிரீட்டிங்ஸ் கார்டு கடைசியில் இப்படி ஆகிவிட்டதே என்று நொந்து போன டான் ஒயிட், இந்த பல் எக்ஸ்ரேவுடன் கூடிய கிறிஸ்துமஸ் கார்டை தனது ட்விட்டரிலும் பகிர்ந்து நடந்த நிகழ்வை விவரித்து பதிவிட்டு இருக்கிறார். இவருடைய பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பற்கள் தெரியும் இடத்தில் பச்சை நிற வண்ணத்தை அடித்து விடுங்கள்..பார்ப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம் போல மாறிவிடும் என்று ஐடியாக்களை கொடுத்துள்ளனர்.

தவறுதலாக இந்த எக்ஸ்ரேவை
இது குறித்து டன் ஒயிட் கூறுகையில், "எனது பக்கத்து வீட்டில் வசிப்பருடைய பற்கள் சற்று பெரியதாக இருக்கும். இதை எனக்கு தெரிந்த பல் மருத்துவரிடம் காட்டுவதற்காக அவர் எடுத்து இருந்த எக்ஸ்ரேவை எனது செல்போனில் படம் பிடித்து வைத்து இருந்தேன். கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்டுக்காக எனது செல்போனில் உள்ள படத்தை பதிவேற்றும் போது தவறுதலாக இந்த எக்ஸ்ரேவை அப்லோடு செய்து விட்டேன். இதுவே இந்த குளறுபடிக்கு காரணம்" என்று சொல்லி கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட கிளம்பியிருக்கிறார் டன் ஒயிட்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications