வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு..72 வயது முதியவர் அரங்கேற்றிய கொடூரம்..ஷாக் கொடுக்கும் பின்னணி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியது 72-வயது முதியவர் என்றும் அவரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த கொடூர சம்பவத்திற்கான பின்னணி காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அருகே உள்ள மாண்ட்ரே பார்க் என்ற இடம் உள்ளது.

இந்தப் பகுதியில் சனிக்கிழமை இரவு சீனவின் சந்திர புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. சீன வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபருக்கு சொந்தமான ஓட்டலில் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அரசியல் சாசன அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துக்கொண்டது.. மத்திய சட்ட அமைச்சர் புது குற்றச்சாட்டு அரசியல் சாசன அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துக்கொண்டது.. மத்திய சட்ட அமைச்சர் புது குற்றச்சாட்டு

திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்

திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்

ஆசிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அங்கு இந்த கொண்டாட்டாத்தை கொண்டாடுவதற்காக சுமார் 10 ஆயிரம் வந்து இருந்தனர். புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு இருந்த போது அங்கு திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதனால், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அச்சம் அடைந்து ஓடினர். அதற்குள் நவீன துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுடத்தொடங்கினார்.

10 பேர் பலி

10 பேர் பலி

திடீரென நடந்த இந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். கடந்த ஆண்டும் மாண்ட்ரே பார்க் பகுதியில் இதே நாளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் நிகழ்விடத்தை சுற்றி வளைத்து பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திய போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

72 வயதான முதியவர்

72 வயதான முதியவர்

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நின்றது. இந்த வேனை நெருங்கிய போது அதில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்த போது 72-வயதான முதியவர் இறந்து கிடந்தார். இந்த நபரின் பெயர் ஹூ க்ன் ட்ரான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

இவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக சந்தேகிக்கிறோம். வேறு யாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரியவில்லை. துப்பாக்கிசூடு சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சில குறிப்பிட்ட குழுவை குறிவைத்து அதாவது வெறுப்பு குற்றமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்று தெரியவில்லை எனவும் அது தொடர்பாகவும் விசாரிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி கிடைப்பதை கட்டுப்படுத்த வேண்டும்

துப்பாக்கி கிடைப்பதை கட்டுப்படுத்த வேண்டும்

அமெரிக்காவில் கடந்த மே மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவே ஆகும். அமெரிக்காவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்த 647 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மொத்தமாக 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அங்கு துப்பாக்கி எளிதாக கிடைப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் வலுக்க தொடங்கியிருக்கின்றன.

English summary
10 people were killed in a shooting during a Chinese New Year celebration in the United States. US officials said the shooter was a 72-year-old man who also shot himself. They also said that they are investigating the reason behind this horrible incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X