"ஈரானை ஒரே இரவில் தாக்கி அழிப்போம்.." டிரம்ப் இறுதி எச்சரிக்கை.. உலக போரை ஆரம்பிக்கும் அமெரிக்கா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் மீதான அமெரிக்கா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இதற்கிடையே ஈரானுக்கு அதிபர் டிரம்ப் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா நினைத்தால் ஒட்டுமொத்த ஈரான் நாட்டையும் ஒரே இரவில் முழுமையாக அழிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். வளைகுடாவில் போர் தொடரும் நிலையில், டிரம்பின் இந்த எச்சரிக்கை பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வளைகுடா மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இந்த மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. ஒரு பக்கம் அமெரிக்கா- ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் தற்போதைய சூழலில் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை.

Donald Trump US Iran

வளைகுடா மோதல்

வளைகுடா போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாகப் பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா ஒரு முன்மொழிவை அனுப்பியது. அதன் மீது முடிவெடுக்க 10 நாள் டைமும் தரப்பட்டது. முதலில் அதைக் கண்டு கொள்ளாத ஈரான் கடைசி நேரத்தில் பதிலளித்தது. டிரம்பின் முன்மொழிவை நிராகரித்த ஈரான், பதிலுக்கு வேறு ஒரு முன்மொழிவைக் கொடுத்தது. தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது எனச் சொன்ன ஈரான், நிரந்தர போர் நிறுத்தமே வேண்டும் என வலியுறுத்தியது. இதனால் போர் முடிவுக்கு வராத ஒரு சூழலே இருக்கிறது.

ஒரே இரவில் அழிப்போம்

இதற்கிடையே ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒட்டுமொத்த ஈரான் நாட்டையும் ஒரே இரவில் முற்றிலுமாக தங்களால் அழித்தொழிக்க முடியும் என்றும் அது செவ்வாய்க்கிழமை இரவே நிகழலாம் என்றும் பகிரங்கமாக எச்சரித்தார். போர் நிறுத்தத்திற்கு வர வேண்டும் அல்லது ஹார்முஸை திறக்க வேண்டும் என அமெரிக்கா மிரட்டி வரும் சூழலில், டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பதிவில் தொடர்ச்சியாகப் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அவர் ஒரு போஸ்ட்டில், "ஒட்டுமொத்த ஈரான் நாட்டையும் ஒரே இரவில் தகர்க்க முடியும். அது இன்று இரவாகக்கூட இருக்கலாம்.. இன்று ஈரானுக்கு 'மின் நிலைய நாள்' மற்றும் 'பாலங்கள் நாள்' என்று ஒரே நேரத்தில் அமையும். அப்படிப்பட்ட தாக்குதலை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்!!! ஜலசந்தியை உடனடியாக திறங்கள்.. முட்டாள்தனம் வேண்டாம்.. இல்லையென்றால் நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

டிரம்ப்

முன்னதாக, திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிப்பதைத் தாண்டி வேறு பல ஆப்ஷன்கள் குறித்ததும் பரிசீலனை செய்து வருவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும், "ஈரானில் இனி எந்தவொரு பாலமும் இருக்காது.. மின் நிலையங்கள் இருக்காது, எதுவுமே இருக்காது. நான் வேறு எதையும் செல்லப் போவதில்லை.. ஏனெனில் அந்த இரண்டையும் விட மோசமான பல விஷயங்கள் உள்ளன" என்றார். மேலும், போர் நிறுத்தம் குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

ஈரான் அரசு கவிழும்

அவர் மேலும், "ஈரான் எண்ணெய்யை நான் பறிக்க விரும்புவேன். ஆனால் அமெரிக்க மக்கள் அதை விரும்புவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் உள்ளே சென்று, தேவையானதைச் செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதையே அமெரிக்க மக்கள் விரும்புகிறார்கள். ஈரான் மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர்களே தங்கள் அரசுக்கு எதிராகத் திரும்புவார்கள். தங்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பது தெரிந்தால் ஈரான் மக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்திப் போராடுவார்கள். ஈரான் மக்கள் ஆயுதமேந்திப் போராடினால் இரண்டே நொடிகளில் ஈரான் அரசு கவிழும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+