வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் அதிபர் யார் என்பதை தீர்மானிக்க போகும் 7 மாகாணங்கள்.. கடும் இழுபறி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்கான்சின், நெவாடா, அரிசோனா, மிச்சிகன், பென்சில்வேனியா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினா ஆகிய ஏழு மாகாணங்கள் தான் வெற்றியை தீர்மானிக்க போகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஜோ பிடன் 238 இடங்களிலும், டிரம்ப் 213 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார்கள். மெஜாரிட்டி என்பது 270 இடங்கள் ஆகும்.

சீனா எதிர்பார்த்த தருணம்.. டிரம்ப் மட்டும் அப்படி செய்தால்.. அவ்வளவுதான்.. நெருக்கடியில் ஜோ பிடன்!சீனா எதிர்பார்த்த தருணம்.. டிரம்ப் மட்டும் அப்படி செய்தால்.. அவ்வளவுதான்.. நெருக்கடியில் ஜோ பிடன்!

எவை எவை

எவை எவை

தற்போதைய நிலையில் விஸ்கான்சின், நெவாடா, அரிசோனா, மிச்சிகன், பென்சில்வேனியா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினா ஆகிய மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மாநிலங்களின் பெறும் வெற்றி தான் டிரம்ப்போ அல்லது ஜோ பிடனோ அதிபராகப்போவதை உறுதி செய்யப்போகின்றன.

 ஜார்ஜியாவில் டிரம்ப்

ஜார்ஜியாவில் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப் வட கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் நூழிலையில் முன்னிலை வகிக்கிறார் இதேபோல் நெவாடா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

எங்கு வெற்றி பெற வேண்டும்

எங்கு வெற்றி பெற வேண்டும்

தற்போதைய நிலையில் ஜார்ஜியா மற்றும் அரிசோனாவில் பிடன் வெற்றிபெற்றால் அதிபராக முடியும். இதன் மூலம் பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் அல்லது விஸ்கான்சின் தோற்றாலும் 270 வாக்குகளை அவரால் பெற முடியும். இதேபோல் மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியாவில் வென்றாலும் பிடன் அதிபராக முடியும். கலிபோர்னியாவில் பீடனும். டெக்ஸாஸில் டிரம்பும் வெற்றி பெற்றுள்ளனர். நியூயார்க்கில் பீடனும், இலியானஸ் மாகாணத்தில் டிரம்பும் வெற்றி பெற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

தற்போதைய நிலையில் பிடனின் பிரச்சாரக்குழு தங்களுக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். ஆனால் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப், தாங்கள் தான் வெற்றி பெற்றதாக கூறியதுடன், முடிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகும்

நீண்ட நேரம் ஆகும்

பலலட்சம் கணக்கான வாக்குகள் இதுவரை எண்ணப்படாமால் உள்ளதால் , எந்தவொரு வேட்பாளரும் இதுவரை வெற்றியைக் கோர முடியாத நிலை உள்ளது. இந்த நூற்றாண்டில் முதல்முறையாக தேர்தல் நாளுக்கு முன்னதாக 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தேர்தல் முடிவை அறிய அமெரிக்கா உள்பட மொத்த உலக நாடுகள் ஆர்வமுடன் உள்ளன. ஆனால் முடிவுகள் தெளிவாக தெரியவர இன்னும் நாளாகும் என்று தெரிகிறது.

English summary
Wisconsin, Nevada, Arizona, Michigan, Pennsylvania, Georgia and North Carolina are still counting votes.. These 7 states that will decide the presidential race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X