வேலையை காட்டிய டிரம்ப்.. பாகிஸ்தான் - சீனாவை திருப்திப்படுத்த இந்திய மேப்பை நீக்கிய அமெரிக்கா! ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US Presdient Donald Trump) நம் நாட்டுக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் பகுதியுடன் வெளியிட்ட இந்திய மேப்பை அமெரிக்கா திடீரென்று நீக்கி உள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் சீனா ஹேப்பியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு விதித்த 50 சதவீத வரியை வெறும் 18 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நம் நாடும், அமெரிக்காவும் சேர்ந்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து கூட்டறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக United States Trade Representative என்ற அமெரிக்காவின் எக்ஸ் வலைதள பக்கத்தில் அப்டேட்டுகள் வழங்கப்பட்டன.
PoK உடன் வெளியான மேப்
அதில் நம் நாட்டின் வரைபடம் (மேப்)வெளியிடப்பட்டது. அதில் நம் நாட்டுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupied Kashmir or POK) மற்றும் சீனா உரிமை கொண்டாடும் அக்சாய் சின் பகுதிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் வசம் உள்ள நிலையில் அக்சாய் சின் பகுதிக்கு சீனா உரிமை கோரி வருகிறது.
கிளம்பிய எதிர்ப்பு
இந்த விஷயத்தில் இருநாடுகளுக்கும், நமக்கும் பிரச்சனை உள்ளது. இது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். இப்படியான சூழலில் தான் அமெரிக்கா அந்த 2 இடங்களையும் நம் நாட்டுக்கு சொந்தமானது என்று வரைபடம் வெளியிட்டது. இதற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் தான் தற்போது அந்த வரைபடம் நீக்கப்பட்டுள்ளது.
நிலைப்பாட்டை மாற்றிய அமெரிக்கா
அமெரிக்காவை எடுத்து கொண்டால் எப்போதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நம் நாட்டின் வரைபடத்துடன் சேர்த்து அமெரிக்கா வரைபடம் வெளியிடுவது இல்லை. பாகிஸ்தானுடனும் சேர்ப்பது இல்லை. மாறாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனியாக கோடிட்டு பிரித்து காட்டும். ஆனால் இந்த முறை நம் நாட்டின் வரைபடத்துடன் சேர்த்தது.
பதிவு நீக்கம்
இதனால் அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அதிருப்தியடைந்தது. அதேபோல் சீனாவும் அதிருப்தியானது. இப்படியான சூழலில் தான் அமெரிக்கா வர்த்தக பிரதிநிதி அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தின் பதிவை நீக்கி உள்ளது.
முன்னதாக இந்த மேப் வெளியானபோது அமெரிக்கா இதனை தவறாக பதிவேற்றம் செய்ததா ? அல்லது அமெரிக்கா திட்டமிட்டு இதனை செய்கிறதா? என்ற கேள்வியும்எழுந்தது. ஆனால் தற்போது பதிவு நீக்கப்பட்டு இருப்பதன் மூலம் சர்ச்சைக்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நமக்கு சொந்தமான பகுதி
இருப்பினும் உண்மையிலேயே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சான் சின் பகுதிகளை நமக்கு சொந்தமானது தான். அதை சரியாக பதிவிட்டும் கூட அமெரிக்கா நீக்கி இருப்பது நம் நாட்டுக்கு சோகமான செய்தியாக பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications