பூமியை அழிக்கும் "மெகா" சுனாமி வருமே! உலகின் மிக பெரிய அணுகுண்டை.. கடலில் வெடிக்க வைக்கணுமாம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் நீங்கள் நினைத்துக் கூட பார்க்காத யோசிக்காத பல சம்பவங்கள் நடக்கும். பல யோசனைகள் இருக்கும். இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஆபத்தான யோசனையை முன்வைத்திருக்கிறார். அதாவது கடலுக்கு அடியில் உலகின் மிகப் பெரிய அணுகுண்டை வைக்க வேண்டுமாம். ஏன் அவர் இந்த ஐடியாவை சொன்னார்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
காலநிலை மாற்றம் என்பது இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்க ஆய்வாளர் வினோதமான ஐடியாவை முன்வைத்து இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்க ஆய்வாளர்
இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 25 வயது இளைஞர் ஒருவர், கடலுக்கு அடியில் உலகின் மிகப் பெரிய அணு குண்டை வெடிக்கச் செய்ய வேண்டும் என்றும் இதன் மூலம் கார்பன் வாயுவை உறிஞ்சும் கடற்பாறைப் படிமங்களை அழிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார். ஆண்டி ஹேவர்லி என்ற அந்த இளைஞர் arXiv என்ற இணையதளத்தில் இதுகுறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் இந்த புதுமையான அணுகுமுறை மூலம் காலநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைத் தீர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
அந்த ஆய்வுக் கட்டுரையில் அவர் மேலும், "கடல் படுகையின் அடியில் துல்லியமாக இதைச் செய்வதன் மூலம் கதிர்வீச்சு ஆபத்து மற்றும் சேதத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதே நேரம் அந்த கற்களை வைத்து பூமியில் உள்ள கார்பன் அளவை குறைக்க முடியும்" என்கிறார்.
என்ன காரணம்!
அதாவது கடலில் ஒரு சில வகை கற்கள் உள்ளன. அவை இயற்கையாகவே கார்பனை உறிஞ்சிக் கொள்ளும். எப்படி ஸ்பாஞ் தண்ணீரை உறிஞ்சுகிறதோ அதுபோல செயல்படும். இந்த கற்களைத் தான் அணு ஆயுதங்கள் மூலம் வெடிக்க வைக்க வேண்டும் என்கிறார். அப்போது கற்களின் கார்பன் உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். அதிக கார்பன் உறிஞ்சப்படுவதால் புவி வெப்பமடையும் ஆபத்து குறையும் என்பதே அவரது ஐடியா.
ஒவ்வொரு ஆண்டும் 36 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. அதை வைத்துக் கணக்கிட்டால் 81 ஜிகா டன் வெடிக்கும் சக்தியுடைய அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அடுத்த 30 வருட கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை ஒரே நேரத்தில் குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இவர்!
இருப்பினும், இந்த ஐடி ஊழியருக்குக் காலநிலை மாற்றம் குறித்தோ அல்லது அணுசக்தி குறித்தே எந்தவொரு நிபுணத்துவமும் இல்லை.. கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படம் பார்த்து இந்த ஐடியா வந்ததாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஓப்பன்ஹெய்மர் படம் பார்த்த பிறகுதான் எனக்கு இந்த ஐடியா வந்தது. பாறைகளைச் சிதைவடையச் செய்வது மற்றும் அணு ஆயுதங்களை பூமிக்கு அடியில் வெடிக்கச் செய்வது என்பது எல்லாருக்கும் உள்ள ஐடியா. ஆனால், அதை ஒருங்கிணைத்துக் குறித்து யாரும் பரிசீலிக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டேன்" என்றார்.
காலநிலை மாற்றத்தை மெதுவாக்க இதுபோன்ற வினோதமான திட்டம் முன்னெடுக்கப்படுவது இது முதல்முறை இல்லை. பூமிக்கு வரும் சூரிய ஒளியைக் குறைக்கும் திட்டத்திற்குப் பிரிட்டன் அரசு 567 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுபோல பல ஆய்வுகள் உலகெங்கும் நடந்தே வருகிறது.
ரிஸ்க் அதிகம்
இருப்பினும், அணு ஆயுதங்களை இதற்குப் பயன்படுத்துவதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே போகிறார்கள். ஏனென்றால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது சிறிய பிழை நடந்தாலும் பேரழிவு ஏற்படும். ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதங்களால் ஏற்பட்ட சேதத்தை உலகமே அறியும். ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இவர் ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதத்தை விடப் பல லட்சம் மடங்கு வலிமையானதாகும்.
இவ்வளவு ரிஸ்க் எடுத்து அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை விட கார்பன் வெளியேற்றத்தையும் காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த பிராக்டிக்கலான குறைந்த செலவில் பல திட்டங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications