உலகம் முழுவதும் அமெரிக்க விசா நேர்காணல் திடீரென ரத்து.. டிரம்ப் அரசு அதிரடி.. கலக்கத்தில் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டிரம்ப் அரசு பதவியேற்றது முதலே குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதற்கிடையே திடீரென உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களில் விசா நேர்காணல் சந்திப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பித்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு குடியேற்றத்திற்கு எதிராக கடுமை காட்டி வருகிறது. முதலில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த டிரம்ப், பிறகு சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

US Visa World

விசா முடக்கம்

திடீரென உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களில் விசா நேர்காணல் சந்திப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. எவ்வளவு காலம் இது நிறுத்தப்படும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில், அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பித்தவர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகையில், "உலகம் முழுவதும் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதன் காரணமாகவே இப்போது விசா நேர்காணல்களை மாற்றி அமைத்துள்ளோம். விசா கோரி விண்ணப்பிக்கும் அனைவரது விண்ணப்பங்களையும் ஒரே மாதிரி பிராசஸ் செய்து, விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என்பதை சொல்லி தரவே இந்த பயிற்சியை நடத்துகிறோம்" என்றார். அதேநேரம் எத்தனை நாட்களுக்கு இந்த பயிற்சி நடக்கும் எப்போது விசா நேர்காணல் மீண்டும் தொடங்கும் என்பது குறித்து எந்தவொரு காலக்கெடுவும் வெளியிடப்படவில்லை.

மெயில்

விசா நேர்காணல்கள் நிறுத்தப்படுவது குறித்து முதலில் பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ஏற்கனவே குடியேற்ற விசா நேர்காணல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்ட சிலருக்கு இது தொடர்பாக மெயில்கள் போய் உள்ளன. அதில் அவர்களின் நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப் அரசு கடந்தாண்டு அதிபராக பதவியேற்றார். அப்போது முதலே டிரம்ப் அரசு குடியேற்ற கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. விசாக்கள் மற்றும் கிரீன் கார்டுகளை ரத்து செய்வது, பல்வேறு காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சோஷியல் மீடியாவில் போடப்படும் போஸ்ட்களை கூட கண்காணித்து டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்க அரசுக்கு எதிரான கருத்துகள் மற்றும் பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகள், பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் பங்கேற்பதை கூட கண்காணிக்கிறது.

டிரம்ப் அரசு நடவடிக்கை

இது போக H-1B விசா திட்டத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரவும் டிரம்ப் அரசு பரிசீலித்து வருகிறது. ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்தும் H-1B விசாவில் இந்த மாற்றங்கள் வரவுள்ளதால் அது இந்தியர்களை நேரடியாக பாதிக்கும்.

இது தவிர சுற்றுலா அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக அமெரிக்கா சென்று பின்னர் அங்கேயே தங்குவதற்காக புகலிடம் கோரிய சுமார் 2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்யும் திட்டத்தையும் அமெரிக்க அரசு முன்னெடுத்து வருகிறது. இப்படி குடியேற்ற விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் அரசு எடுத்து வருகிறது.

கடும் எதிர்ப்பு

அதேநேரம் டிரம்பின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக உள்ள என சொல்லிவிட முடியாது. டிரம்ப் அரசின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் 75 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை நிறுத்திய டிரம்ப் அரசின் கொள்கையை அமெரிக்க நீதிபதி ரத்து செய்தார். இந்த நடவடிக்கையை எடுக்க டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

மேலும், டிரம்ப் அரசின் குடியேற்ற நடவடிக்கைகளை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த நடவடிக்கைகள் பாரபட்சமானவை என்றும் கருத்து சுதந்திரம் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு எதிரானவை என்றும் அவை குற்றம்சாட்டியுள்ளன. இன சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை டிரம்ப் அரசு எடுத்து வருவதாகவும் சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+