'ஓ' இதுதான் அதிர்ஷ்ட தேவதை கண் திறக்கிறதோ? 2 மாதங்களில் 2 முறை லாட்டரி பரிசு..16 கோடியை அள்ளிய பெண்
வாஷிங்டன்: ஒருமுறை லாட்டரியில் பணம் அடிக்காதா என லாட்டரி பிரியர்கள் பலரும் ஏங்கிக் கொண்டு இருக்கையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரண்டு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. அதுவும் இந்திய மதிப்பில் ரூ.16 கோடி பரிசு அடித்துள்ளது. இந்த பணத்தைக் கொண்டு உணவகம் அமைக்கும் தனது கனவை நிறைவேற்ற போவதாக கூறி வருகிறார் அந்த அமெரிக்க பெண்.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்களே.. அது லாட்டரிச்சீட்டுக்களில் பரிசு அடிப்பவர்களுக்கு அப்படியே பொருந்தும் எனலாம்.
பெரிதாக சம்பாதிக்க முடியவில்லையே என்று அலட்டிக் கொள்பவர்களுக்கு புதையல் கிடைத்தது போல திடீரென பணம் கொட்டுவது எல்லாம் லாட்டரி சீட்டில் பணம் கிடத்தால் மட்டுமே சாத்தியப்படும்.

லாட்டரியால் அதிர்ஷ்டக்காற்று
இந்தியாவிலும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி உள்ளது. இந்த லாட்டரி சீட்டுக்களில் பணம் அடித்து ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியாகும் அதிர்ஷ்டக்காரர்கள் குறித்த செய்திகள் இணையத்தில் பரவி பலரையும் பொறாமைப்பட வைக்கும் வகையில் அமையும். அனைவருக்கும் இப்படி அதிர்ஷ்டக்காற்று வீசும் என்று சொல்லிவிட முடியாது. ஆண்டுக்கணக்கில் லாட்டரிகளை வாங்கி பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் பல நபர்கள் இருக்கிறார்கள்.

அடித்த நபருக்கே மீண்டும் மீண்டும்..
இதனால், லாட்டரியே கதி எனக் கிடந்தாலும் மன உளைச்சல் தான் மிஞ்சும் என்பதில் ஐயம் இல்லை.. சரி இதெல்லாம் இருக்கட்டும் அமெரிக்காவில் தற்போது இரண்டு மாத இடைவெளியில் அடுத்தடுத்து 1 மில்லியன் மற்றும் 2 மில்லியன் டாலர் பரிசுத்தொகை ஒருவருக்கு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் ரூ.24 கோடியை தாண்டும். இந்த செய்திதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வியப்புடன் பேசப்படுகிறது. இது குறித்த விரிவான விவரம் பின்வருமாறு:-

மேரிலாண்ட் மாகாணத்தில்
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் புழக்கம் அதிகம் உள்ளது.
ஒட்டு மொத்த அமெரிக்காவிலும் லாட்டரிக்கு அனுமதி இல்லை என்றாலும், பெரும்பாலான மாகாணங்களில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. இதனால் அடிக்கடி இத்தகைய லாட்டரிகளில் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளின் சுவாரசிய செய்திகள் இணையத்தில் பரவி பலரையும் ரசிக்க வைக்கும் அளவில் அமையும்.

ஒரு மில்லியன் டாலர் பரிசு
அந்த வகையில் வடக்கு கரோலினாவில் உள்ள ஷெல்பி பகுதியை சேர்ந்த கென்யா சோலன் (வயது 31) என்ற பெண்மணி கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக அங்குள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார். சுரண்டல் வகை லாட்டரியான இதில், அவருக்கு முதல் முறையே ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை விழுந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி கிடைத்துள்ளது. இதனால், மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த கென்யா சோலன் இந்தப் பணதைக் கொண்டு சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்தார்.

மறு மாதமே மீண்டும் 1 மில்லியன் டாலர் பரிசு
மறு மாதமே மீண்டும் 2 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட டிக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார். ஏற்கனவே பரிசு விழுந்ததால் மீண்டும் பரிசுத்தொகை கிடைக்குமா? என்ற ஆர்வம் ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் பெரிதாக நம்பிக்கை இல்லாமலும் இருந்துள்ளார். ஆனால், அவரது அதிர்ஷ்டம் இதிலும் 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது. இதனால் கென்யா சோலன் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

2 மாதத்தில் ரூபாய் 16 கோடி
இரண்டு மாத இடைவெளியில் 2 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.16 கோடி மதிப்பு பணத்தை லாட்டரி மூலமாக அள்ளிவிட்டார் கென்யா சோலன். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை விழுந்ததை தன்னால் நம்பவே முடியவில்லை என்று கூறும் கென்யா சோலன், இந்த பணத்தைக் கொண்டு உணவகம் திறக்கும் தனது கனவை நிறைவேற்றப்போவதாக மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.
-
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்! -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்?












Click it and Unblock the Notifications