வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளான் "எக்ஸ்"! இந்த முறை மிஸ் ஆகாது.. பக்காவாக மீண்டும் ட்விட்டர் பக்கம் திரும்பும் எலான் மஸ்க்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீர் திருப்பமாக ட்விட்டர் தளத்தை மீண்டும் வாங்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்து உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் முக்கியமானது ட்விட்டர். அனைத்து உலக பிரபலங்களும் முக்கிய அறிவிப்புகளை ட்விட்டர் மூலமே வெளியிடுகின்றனர்.

அனைத்தையும் வெறும் 140 எழுத்துகளில் சொல்ல வேண்டும் என்பதால் ட்விட்டர் சீக்கிரமே ஹிட் அடித்தது. இதனால் உலகில் அதிக ஆக்டிவ் பயனாளர்களைக் கொண்ட தளங்களில் ஒன்றாக ட்விட்டர் உள்ளது.

பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் திடீரென்று இந்தியாவில் முடக்கம்.. பின்னணி காரணம் என்ன? பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் திடீரென்று இந்தியாவில் முடக்கம்.. பின்னணி காரணம் என்ன?

ட்விட்டர்

ட்விட்டர்

பல சிறப்புகளைக் கொண்டு இருந்தாலும் கூட, அந்நிறுவனத்தின் வளர்ச்சி சில ஆண்டுகளாகச் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. இதனால் ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் அதிருப்தியிலேயே இருந்தனர். இந்தச் சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் தளத்தை வாங்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார். ஒட்டுமொத்தமாக ட்விட்டரின் அனைத்து பங்குகளை 44 மில்லியன் டாலருக்கு வாங்குவதாக மஸ்க் அறிவித்தார்.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ஒரு பங்கை சுமார் 54 டாலருக்கு மஸ்க் வாங்குவதாக அறிவித்தார். விரைவில் இந்த ஒப்பந்தம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென 44 மில்லியன் என்பது ட்விட்டர் தளத்திற்கு அதிகம் என்பதால் இதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். போலிக் கணக்குகள் ட்விட்டர் தளத்தில் அதிகமாக உள்ளதாகவும் அது தொடர்பான தரவுகள் ட்விட்டர் தளத்திலும் சரியாக இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.

 வழக்கு

வழக்கு

ட்விட்டர் தளத்தை வாங்குவதாக அறிவித்துவிட்டு, திடீரென பின்வாங்கியது அந்நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் எலான் மஸ்க் எதிராக வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்னும் இரு வாரங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எலான் மஸ்க் மீண்டும் ஒரு பரபர அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

 பிளான் எக்ஸ்

பிளான் எக்ஸ்

அதாவது 44 மில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கத் தயாராக உள்ளதாக மஸ்க் அறிவித்து உள்ளார். தனது சொந்த செயலியான எக்ஸ் (X) செயலிக்கு இது உதவும் என ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ட்விட்டரை வாங்குவது அனைத்தையும் உள்ளடக்கி இருக்கும் எக்ஸ் செயலியை உருவாக்கும் செயலை வேகப்படுத்தும்" என்று பதிவிட்டு உள்ளார். அவர் இதற்கு முன்னரே பல சமயங்களில் சொந்தமாக எக்ஸ் என்ற சமூக வளைத்ததை உருவாக்குவது தொடர்பாகப் பேசி வந்துள்ளார்.

 முக்கியம்

முக்கியம்

இதற்கிடையே ட்விட்டர் பயனாளி ஒருவர், "எக்ஸ் செயலியைத் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிப்பதே எளிமையானதாக இருக்குமே" என்று ட்விட்டர் செய்து இருந்தார். அதற்கு எலான் மஸ்க், "ட்விட்டர் தளத்தை வாங்குவது எக்ஸ் சமூக வலைத்தளத்தைத் தொடங்கும் பணியை 3 முதல் 5 ஆண்டுகள் வரை குறைக்கும்" என்று பதில் அளித்து உள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை மீண்டும் வாங்க உள்ளதாக அறிவித்து உள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 அதென்ன எக்ஸ்

அதென்ன எக்ஸ்

எலான் மஸ்க் தனது எக்ஸ் செயலி குறித்துப் பேசுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே பல நேரங்களில் இந்த செயலி குறித்து அவர் பேசி உள்ளார். எக்ஸ் என்ற எழுத்துக்கும் தனக்கும் தொடர்பு உள்ளதாக அவர் ஏற்கனவே முன்பு குறிப்பிட்டு உள்ளார். இதன் காரணமாகவே விண்வெளி நிறுவனத்திற்கு அவர் ஸ்பேஸ்எக்ஸ் என்று பெயரிட்டார். இந்த தளத்திற்கான டோமைன் உரிமையும் இப்போது எலான் மஸ்கிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Elon musk says he is ready to buy twitter for his Plan X: Elon musk will start his own app after Twitter Deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X