உலகம் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா: ஒரே நாளில் 28,22,180 பேர் பாதிப்பு - 26,79,130 பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் ஒரே நாளில் 28,22,180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,17,53,166 பேராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பின் வேகம் உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 28,22,180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 26,79,130 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. பல கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் புது புது வேரியண்ட் வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், ஓமிக்ரான் என பல வைரஸ்கள் மக்களை பாதித்துள்ளன.
ஓமிக்ரான் கொரோனா பரவத் தொடங்கியதற்குப் பின்னர் உலகெங்கும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

38 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் ஒரே நாளில் 28,22,180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,17,53,166 பேராக உயர்ந்துள்ளது. 26,79,130 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 30,15,46,530 பேர் குணமடைந்துள்ளனர்.

57,03,939 பேர் மரணம்
கொரோனாவால் 10,956 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 57,03,939 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்து உலகம் முழுவதும் 7,45,02,697 பேர் சிகிச்சையில் உள்ளனர். 92,659 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா நம்பர் 1
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,47,366 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,655 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 158,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,728 பேர் மரணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் அதிகரிப்பு
அதே போல பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 171,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 767 பேர் பிரேசிலில் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். 1,56,919 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,25,836 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் 4,16,896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 381 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 1,33,142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications