Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முதலிரவு" 13 வயது சிறுவனுடன்.. டியூஷன் டீச்சரின் அக்கப்போர்.. எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா?

13 வயது சிறுவனை மணந்து தோஷங்கள் கழித்துள்ளார் ஒரு ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: 13 வயது சிறுவனுடன் ஒரு டீச்சருக்கு முதலிரவு நடந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அதைவிட அதிர்ச்சியை தந்துவருகிறது இதற்காக சொல்லப்படும் காரணம்...!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் பஸ்தி பாவா கெல் என்ற பகுதியை சேர்ந்தவர் அந்த டீச்சர்.. தன்னுடைய வீட்டிலேயே டியூஷனும் நடத்தி வருகிறார்.. நீண்ட காலமாகவே இவருக்கு கல்யாணம் ஆகாமல் இருந்துள்ளது..

இதற்காக இவர் வீட்டில் கல்யாணத்துக்கு பலவகைகளில் முயற்சி செய்திருக்கிறார்கள்.. ஆனால் எதுவுமே செட் ஆகவில்லை. அதனால் ஜோசியம் பார்த்திருக்கிறார்கள்.. அந்த ஜோசியத்தில் டீச்சருக்கு "மாங்கல்ய தோஷம்" இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்..

தோஷம் + தாலி

தோஷம் + தாலி

அதுமட்டுமல்ல, அந்த தோஷத்தை கழிக்க வேண்டுமானால், போலியாக ஒருவரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.. அதற்கு பிறகு விதவை சாங்கியத்தை செய்ய வேண்டும் என்று அந்த ஜோசியக்காரர் சொல்லி இருக்கிறார். தோஷம் உள்ளவர்கள் நம்ம ஊரில் வாழை மரத்துக்கு தாலி கட்டுவார்களே அந்த மாதிரி போலும்... இந்த டம்மி கல்யாணத்தை செய்து கொள்ளலாம் என்றால், அதற்கும் டீச்சருக்கு வழியில்லை.. சரியான வாய்ப்பு அமையவில்லை.

எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்

எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்

அப்போதுதான், தன்னிடம் டியூஷன் படித்து வரும் 13 வயசு சிறுவனின் மீது பார்வை திரும்பியது.. அந்த சிறுவன் என்றால் டீச்சருக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஸ்பெஷல் மாணவனும்கூட.. மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதைவிட, இந்த சிறுவனுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாடம் எடுத்து கூடுதல் அக்கறை செலுத்துவாராம்.. இது அந்த சிறுவனின் வீட்டுக்கும் தெரியுமாம். தங்கள் மகன் மீது டீச்சர் இவ்வளவு அன்பு காட்டுகிறார்களே என்று சிறுவனின் குடும்பமும் பூரித்து போனது.

புதுத்தாலி

புதுத்தாலி

இந்நிலையில், ஒருநாள் சிறுவனின் வீட்டுக்கு சென்ற டீச்சர், உங்கள் பையனுக்கு நிறைய சொல்லி தர வேண்டி உள்ளது.. இதனால், 2 நாட்கள் என் வீட்டிலேயே தங்கி இருக்கட்டும், அனுப்ப முடியுமா? டியூஷன் நடத்திவிட்டு, வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.. அதற்கு பெற்றோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு பிறகு, ஒரு வாரம் கழித்து, டீச்சரின் வீட்டில் இருந்த சிறுவன், தன்னுடைய வீட்டுக்கு சென்றான்.. ஆனால், வீட்டுக்கு போனதில் இருந்தே சிறுவன் பயம், பீதி, டென்ஷனுடனேயே இருந்திருக்கிறான்.. இதனால் பதறி போன பெற்றோர் என்ன ஏதென்று கேட்டனர்.. அப்போதுதான் நடந்ததை சிறுவன் சொல்ல.. அதைக்கேட்டு குடும்பத்தார் அப்படியே மிரண்டு போய்விட்டனர்.

மஞ்சத்தாலி

மஞ்சத்தாலி

டீச்சர் தன்னுடைய மாங்கல்ய தோஷத்தை கழிக்க சிறுவனை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்தது.. சிறுவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டாராம் டீச்சர்.. வீட்டிலேயே அந்த ரகசிய கல்யாணம் நடந்துள்ளது..இதில் ஹைலைட் என்னவென்றால், கல்யாணத்தில் மணப்பெண்ணுக்கு செய்யும், மெஹந்தி விழா, மஞ்சள் விழா கூட நடந்துள்ளது.. மாப்பிள்ளை கெட்டப்பில் சிறுவனை ரெடி செய்துள்ளனர்.. டீச்சருக்கு தாலி கட்ட வைத்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, அன்னைக்கு நைட், முதலிரவும் நடந்ததாம்.. இதை போலீஸ் தரப்பிலேயே சொல்கிறார்கள்.. இதற்கு பிறகு மறுநாள் காலை டீச்சருக்கு அடுத்த சாங்கியம் நடந்துள்ளது..

வளையல்கள்

வளையல்கள்

வெள்ளை புடவை கட்டி, உட்கார வைத்து, அவரது வளையல்களை உடைத்து, தாலியை கழட்டி, விதவை சாங்கியத்தை சிறப்பாக செய்து தோஷத்தையும் கழித்துள்ளனர். இதையெல்லாம் பார்த்து மிரண்டு போய் நின்றிருக்கிறது அந்த 13 வயது பிஞ்சு.. வீட்டில் இதையெல்லாம் சொல்லாதே என்று சொல்லி, சிறுவனை அனுப்பியும் வைத்துள்ளனர்..இவ்வளவும் கேட்டு அதிர்ந்து போன சிறுவனின் பெற்றோர், போலீசுக்கே போய்விட்டனர்.. ஆனால், டீச்சரின் குடும்பம் எதை எதையோ பேசி, அந்த புகாரையே வாபஸ் பெற வைத்துவிட்டதாம்..

பிணைக்கைதி

பிணைக்கைதி

இருந்தாலும் அந்த சிறுவன் மைனர் என்பதால், நிச்சயம் இது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்படும் என்று டிஎஸ்பி ஜலந்தர் குர்மீத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. பிறகு மாணவனிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. அப்போது, தன்னை ஒரு பிணைக்கைதி போல 6 நாட்கள் பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார் என்று கூறியுள்ளான்.. பாதிக்கப்பட்ட மாணவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராம்.. ஸ்கூலுக்கு பீஸ் கட்டக்கூட அவரது வீட்டில் வசதி இல்லையாம்..

உஷார் டீச்சர்

உஷார் டீச்சர்

ஆனால், இலவசமாகவே படிப்பு கற்றுதருவதாக பெற்றோரிடம் அந்த டீச்சர் சொன்னாராம்.. அனுமதி வாங்கிக்கொண்டு அழைத்து செல்லவும்தான், டீச்சரை பெற்றோரும் அளவுக்கு அதிகமாக நம்பி பிள்ளையை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. வறுமையை தனக்கு சாதகமாக இந்த பெண் பயன்படுத்தி கொண்டுள்ளது, அதிலும் ஒரு சிறுவனை தன் சொந்த லாபத்திற்காக பயன்படுத்தி கொண்டுள்ளதை யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை.. இன்னும் இந்த தேசத்தில் என்னென்ன நாம பார்க்க வேண்டி வருமோ? மூடநம்பிக்கை நம்மை எங்கே கொண்டு போய் விட்டுவிடுமோ? தெரியவில்லை.. ஆனால், இனியாகிலும் வடமாநில மக்களுக்கு கல்வியறிவை கிடைக்க செய்வார்களா??

பொம்மை திருமணம்

பொம்மை திருமணம்

இதேபோன்ற சம்பவம் ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்திலும் நடந்தது.. அவரது பெயர் ராஸக் கான்.. 40 வயதுக்கு மேலாகிறது.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், மனைவியை பிரிந்துவாழ்ந்து வந்துள்ளார்.. அதனால், இன்னொரு திருமணம் செய்ய முயன்றார்.. அதனால், ராஜஸ்தானி வசித்து வரும் அவரது உறவினர் பெண்ணை மணக்க முயன்றார்.. இந்த குடும்பம் வறுமையில் உள்ளது.. அந்த பெண்ணுக்கோ வெறும் 12 வயதுதான் ஆகிறது..

பொம்மை கல்யாணம்

பொம்மை கல்யாணம்

ஊரில் உள்ள சொந்தக்காரர்கள் சிறுமியை பார்க்க விரும்புகிறார்கள் என்று சொல்லி, சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.. அங்கு நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணமும் செய்துள்ளார்.. இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்றால், ரேயிஸ் ஷா, அண்ணன் அப்துல்.. உள்ளிட்டோர் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.. ரேயிஸ் ஷா என்பவர் மாப்பிள்ளையின் அப்பா, அப்துல் என்பவர் மாப்பிள்ளையின் அண்ணன், இவர் ஒரு வக்கீலாம்.

டீச்சர் சம்பவம்

டீச்சர் சம்பவம்

"நாமெல்லாம் சேர்ந்து பொம்மை கல்யாணம் விளையாட்டு விளையாடலாமா" என்று சிறுமியிடம் சொன்னாராம் மாப்பிள்ளை.. அதுமட்டுமல்ல, சிறுமிக்கு 18 வயது ஆகிவிட்டது என்று பொய்யான திருமண சான்றிதழும் வாங்கி வைத்துள்ளார்... இந்த கல்யாண விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று, சிறுமியை 2 மாதம் வீட்டில் அடைத்தும் வைத்திருந்தார்... பாட்டியை பார்க்க சென்ற மகள் திரும்ப வராததால் சந்தேகமடைந்த சிறுமியின் அம்மா, ராஸக்கானை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் இந்த விஷயமே தெரிந்தது.. அதற்கு பிறகு இந்த சம்பவம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், அதுபோன்ற அதிர்ச்சியையே இந்த டீச்சர் சம்பவமும் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+