ஆசையாக வாங்கிய ஐஸ்க்ரீம்.. வாய் அருகே சென்ற போது நெளிந்த புழுக்கள்.. ராணிப்பேட்டையில் 'பகீர்'
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் ஒரு பார்லரில் விற்கப்பட்ட ஐஸ்க்ரீமிலில் புழுக்கள் இருந்த சம்பவம் பொதுமக்கள் மத்தயில் அருவருப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உணவு தரத்தை சரிபார்ப்பதற்காகவே தனியாக ஒரு துறை இருக்கும் போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது அரசின் மீது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே ஓட்டலில் விற்கப்படும் உணவுப்பொருட்களில் பல்லி, எலி இருப்பது வாடிக்கையாகிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் இப்படியொரு சுகாதாரமற்ற நிகழ்வு நடைபெறுவது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

சாதாரணமாகி போன தரமற்ற உணவுகள்
ஒருகாலத்தில், டீ, காபி டம்ளரில் ஈ, கொசு விழுந்து கிடந்தாலே மிகப்பெரிய கலவரமாக மாறிவிடும். ஆனால், இன்றோ உணவில் கரப்பான் பூச்சி இருந்தால் கூட, "ஓரமா எடுத்து வெச்சிட்டு சாப்பிடுப்பா" என சொல்லும் அளவுக்கு தான் ஓட்டல்களில் சுகாதாரம் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு உணவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், பொதுமக்களுக்கு எவ்வுளவு தரமற்ற வகையில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது என்பது தெரியவந்தது. இதில் பல ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டன. சிலவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. சமீபத்தில் திண்டுக்கல்லில் கூட வடைகளுக்குள் சுண்டெலியும், பல்லியும் செத்துக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசையாக வாங்கிய ஐஸ்க்ரீம்..
உணவுத் துறையினரின் இத்தனை சோதனைகளை மேற்கொண்ட போதிலும், இன்னும் பல ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ராணிப்பேட்டையில் நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே ஐஸ்கீரிம் பார்லர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பார்லருக்கு நேற்று தனது மகனுடன் வந்த தாவூத் பாட்ஷா என்பவர் பாதாம் ஃப்ரூட் ஐஸ்க்ரீம் வாங்கியிருக்கிறார்.

எட்டிப்பார்த்த புழு
பின்னர், ஐஸ்க்ரீமை சாப்பிடுவதர்காக வாய் அருகே கொண்டு சென்ற போது அதில் பெரிய புழு ஒன்று நெளிந்துக் கொண்டிருப்பதை தாவூத் பாட்ஷா பார்த்துள்ளார். பின்னர், தனது மகனிடம் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை நிறுத்த சொன்ன அவர், இரண்டு ஐஸ்க்ரீம்களை பார்த்த போது அதில் புழுக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், பார்லர் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டார்.

ஆய்வில் அதிர்ச்சி
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தாவூத் பாட்ஷா புகார் அளித்ததன் பேரில் அங்கு வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த ஐஸ்க்ரீம் பார்லரின் சோதனை நடத்தினர். இதில், காலாவதியான உணவுப்பொருட்களை கொண்டு ஐஸ்க்ரீம்கள் அங்கு தயாரிக்கப்படுவதை கண்டறிந்தனர். மேலும், அங்குள்ள ஐஸ்க்ரீம்களை அவர்கள் ஆய்வுக்காக கொண்டு சென்றனர். ஆய்வின் முடிவில், எந்த அளவுக்கு சுகாதாரக்கேடாக அங்கு ஐஸ்க்ரீம்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்து பார்லர் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications