மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் தற்காலிகமாக மூடல்! விமான வழித்தடம் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1, முழுமையாக இடித்து மீண்டும் கட்டப்பட உள்ளதால்.. அங்கிருந்து இயக்கப்படும் 14 சர்வதேச விமான வழித்தடங்கள், தற்காலிகமாக நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளன.

சர்வதேச வான் பயண கூட்டமைப்பின் கோடை கால அட்டவணை அடுத்த ஆண்டு மார்ச் 28 முதல் தொடங்குகிறது. இந்நிலையில், மும்பை விமான நிலையத்தின் 14 சர்வதேச வழித்தடங்களுக்கான ஸ்லாட்டுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Mumbai

பக்ரைன், தமாம், டாக்கா, தோஹா, புஜைரா, ஜாகர்தா, காத்மாண்டு, குவைத் சிட்டி, மதினா, மஸ்கட், அல் கைமா, ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய 14 சர்வதேச வழித்தடங்களுக்கான ஸ்லாட்டுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மும்பை பெருநகர பகுதியில் இருந்து இந்த 14 இடங்களுக்கும் செல்லும் அனைத்து விமானங்களும் இரண்டு வெவ்வேறு விமான நிலையங்களுக்கு பிரிக்கப்படாமல், ஒரே விமான நிலையத்தில் அதாவது.. நவி மும்பை விமான நிலையத்தில் மட்டுமே கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு தடையற்ற இணைப்பு மற்றும் சிறந்த பயண அனுபவம் கிடைக்கும்.

மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பயணியர் போக்குவரத்தை வெளியேற்ற வேண்டியுள்ளது. இந்திய விமான நிறுவனங்களின் மூலம் இதில் 30 லட்சம் பயனியர் போக்குவரத்து, நவி மும்பைக்கு மாற்றப்படும். மும்பை விமான நிலையத்தின் தற்போதைய கொள்ளளவில் 91 சதவீதம் இதனால் பாதிக்கப்படாது.

விமான நிறுவனங்கள், நவி மும்பை விமான நிலையத்திற்கு மாறுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்துள்ளனர். இண்டிகோ நிறுவனம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தனது 12 தினசரி சர்வதேச விமானங்களை நவி மும்பைக்கு படிப்படியாக மாற்ற இருக்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நான்கு தினசரி உள்நாட்டு விமானங்களை வரும் டிசம்பர் முதல் நவி மும்பையிலிருந்து இயக்கும்.

தொடர்ந்து ஜனவரியிலிருந்து ஓமன் மற்றும் குவைத் செல்லும் விமானங்களும், 2027 கோடை காலத்திற்குள் ஜித்தா, தமாம், தோஹா, மஸ்கட் மற்றும் சார்ஜா போகும் விமானங்களையும் நவி மும்பையில் இருந்து இயக்கும். அதே போல ஆகாஷ் ஏர்லைன்ஸ் பொருத்தவரை, இந்த ஆண்டு டிசம்பர் முதல் நவி மும்பையிலிருந்து மும்பை- ஜித்தா இடையான விமான சேவையை தொடங்க உள்ளது.

கடந்த 1964 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தற்போதைய T1 முனையம், 1.5 கோடி பயணிகளை கையாளும் திறந்து கொண்டது. 2017ம் ஆண்டு ஸ்ட்ரக்ட்வெல் நிறுவனமும் 2024-ல் ஐஐடி பாம்பேவும் நடத்திய கட்டமைப்பு தணிக்கைகளில், இந்த முனையத்தின் உள் கட்டமைப்பில் பலவீனங்கள் மற்றும் சிறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டன. இந்த முனையத்தின் மறு சீரமைப்பு பணிகள் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாகி வந்தன. இதன் இடிப்பு பணிகள் 2027 ஏப்ரலில் தொடங்கி கட்டம் கட்டமாக நடைபெறும்.

அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் விமான நிலைய நிறுவனங்களின் கூட்டு அறிவிப்பின்படி புதிய முனையம் 2030 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+