Oats Kozhukattai: ஓட்ஸை வைத்து கஞ்சிதான் செய்யணுமா என்ன! ஹெல்தியான கொழுக்கட்டை செய்யலாமே!
Oats Kozhukattai recipe: ஓட்ஸை வைத்து கஞ்சி குடித்திருக்கிறோம், ஓட்ஸ் உப்புமா செய்திருக்கிறோம். ஆனால் இதை வைத்து சூப்பரான ஆரோக்கியமான கொழுக்கட்டை செய்யலாமே, எப்படி செய்யுறதுனு பார்க்கலாமா?

ஓட்ஸ்- வெள்ளை நிறத்தில் சிறு துகள்கள் போல் இருக்கும். அதாவது ஒரு அவலை 3 பங்காக உடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். இந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும்.
அதிக நார்ச்சத்துகள் கொண்ட ஓட்ஸை பலரும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதயத்தை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் இது உதவுகிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சரும பிரச்சனைகளுக்கும் நல்லத் தீர்வாக உள்ளது. இந்த ஓட்ஸில் கஞ்சி செய்யலாம். இட்லி, தோசையில் கலந்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட ஓட்ஸில் கொழுக்கட்டை கூட செய்யலாமாம்! வாங்க எப்படி செய்யுறதுனு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
தண்ணீர் - அரை கப்
உப்பு- தேவைக்கேற்ப
துருவிய தேங்காய்- 3 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
உளுந்து- 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் -1
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை
- ஓட்ஸில் சிறிது உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரை தெளிக்கவும். அதை நன்கு கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- பின்னர் ஊற வைத்த ஓட்ஸை அதில் சேர்க்க வேண்டும். துருவிய தேங்காயையும் சேர்த்து கலந்து விடவும்.
- பின்னர் அந்த கலவையை சிறிது ஆற வைத்து எலுமிச்சை அளவு உருண்டைகளை உருட்டி இட்லி பாத்திரத்திலோ அல்லது ஸ்ட்டீமரிலோ 7 நிமிடங்களுக்கு வேகவிடவும். உடலுக்கு ஆரோக்கியமானது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications