Ragi Simili: இரும்புச் சத்து நிறைந்த ராகி சிமிலி செய்வது எப்படி?
சென்னை: அதிக புரதம், இரும்பு சத்துக்கள் நிறைந்த ராகி சிமிலி எனும் இனிப்பு லட்டுவை எப்படி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். ராகி சிமிலியை லட்டுவாகவும் செய்யலாம். அல்லது புட்டு போலும செய்து சாப்பிடலாம்.
ராகி, வெல்லம், வேர்க்கடலை, ஏலக்காய் தூள், நெய், எள் உள்ளிட்டவை ஆகும். கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாட்சியம், பாலிபீனால் ஆகியவை உள்ளன.

இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன. தற்போது இந்த சிமில செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு- 200 கிராம்
வெல்லம்- 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
எள் - சிறிதளவு
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
நெய்- தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறுது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சாப்பாத்திகளாக அல்லது ரொட்டிகளாக இட்டுக் கொள்ளவும்
அதை தோசை கல்லில் போட்டு வேக விடவும். பின்னர் வேர்க்கடலையை வறுத்து தோலுரித்து ஒன்றும் பாதியாக நுணுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
எள்ளை பொரித்துக் கொள்ளணும். சப்பாத்திகள் அல்லது ரொட்டிகள் ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு கொகொரப்பாக அரைக்கவும். பின்னர் அரைத்த மாவுடன் வேர்க்கடலை, நெய், வெல்லம், எள் ஆகியவற்றை சேர்த்து உருண்டைகளாக உருட்டிக் கொண்டால் சிமிலி ரெடி!
இந்த ராகி மாவை சப்பாத்திகளாக இடுவதற்கு பதில் தண்ணீர் தெளித்து கையில் மாவை பிடித்து பார்த்தால் கொழுக்கட்டை போல் பிடிக்க வரணும். அப்போது அதை ஆவியில் வைத்து சூடு ஆறியதும் அரைத்துக் கொள்ளலாம். மேலும் வெல்லம் உள்ளிட்டவைகளை சேர்த்து உருட்டிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications