For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீதா உபதேசம்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டவ நாட்டை தர்மர் தலைமையிலான பாண்டவர்களிடம் இருந்து பறிக்க துரியோதனன்தலைமையிலான கெளரவர்கள் சதித் திட்டம் போட்டபோது போர் மூண்டது.

பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணர் போர் களம் இறங்கினார். வில்வித்தை வீரனானஅர்ஜூனனுக்கு சாரதியானான் கிருஷ்ணன். இதனால் பார்த்தசாரதி ஆனான்.

Krishnaஎதிரே நிற்பது என் உறவினர்கள். அவர்களோடு போரிட்டு அவர்களை கொன்று நான்ராஜ்ஜியம் அடைய வேண்டுமா? என்று அர்ஜூனன் மனம் கலங்கி நின்றபோதுஅவனுக்கு கிருஷ்ணன் வழங்கிய அறிவுரைக தான் பகவத்கீதை.

எந்தக் காலத்துக்கும் பொறுந்தும், முக்தி தரும் உபதேசம் பகவத் கீதை. மக்களின் எல்லாஐயங்களும் தீர ஆண்டவன் அருளிச் செய்ததுதான் பகவத் கீதை.

கீதையில் கண்ணன் கூறுகிறார்:

எப்போதெல்லாம், எங்கெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்போதெல்லாம்அங்கெல்லாம் நான் அவதரிப்பேன். அநீதியை அழிப்பேன்.

நான் நான் என்று கூறுகிறாயே அர்ஜுனா? நான் என்பது எது? நான்தான் நீ! நீ தான்நான்! உன்னை இயக்குபவன் நான்.

நடந்தது நல்லதாகவே நடந்தது. நடப்பது நல்லதாகவே நடக்கிறது. நடப்பதும்நல்லதாவே நடக்கும் . கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே. பலன் தானாகவரும்.

இந்த உலகில் எதுவும் எவருக்கும் சொந்தமல்ல. நாம் வரும் போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை. போகும்போதும் ஒன்றும் கொண்டு போகப்போவதில்லை.

கண்ணனே கூறினான், கண்ணனே இயக்கினான். அவனே எல்லாவற்றிற்கும் காரணம்.போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.

என்பன போன்ற பல அரிய கருத்துக்களை நமக்கு வழங்கி நம்மை நல்வழிபடுத்தகீதையை அருளினார். கிருஷ்ணன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X