For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆலயம் தொழுவது...

By Staff
Google Oneindia Tamil News

Then Tirupathi Perumalதிருப்பதி சென்று வந்தால் திருப்பங்கள் நேரும் என்பது முதுமொழி. ஆனால் நினைத்தவுடன் திருப்பதிக்குச் சென்று வருவது எல்லோராலும் முடியாத காரியம்.

எல்லோரும் சென்று திருப்பதி திருவேங்கடடையானைத் தரிசிக்கும் வகையில் ஒரு திருத்தலம் தென்னகத்தில் உள்ளது. அதுதான் தென் திருப்பதி என புகழப்படும்அரியக்குடியாகும்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளதுதான் அரியக்குடி. காரைக்குடியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 3கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அரியக்குடி.

செட்டிநாட்டில் நகரத்தார்கள் வாழும் 96 ஊர்களில் அரியக்குடியும் ஒன்று. இந்த நூற்றாண்டின் சங்கீத மேதையான அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இந்ததிருத்தலத்தில்தான் அவதரித்தார் என்பது நினைவில் வைக்கத் தகுந்தது.

அரியக்குடி என்றால் என்ன?

தென் திருப்பதி என்ற பெயரும் அரியக்குடிக்கு உண்டு. அது சரி, அரியக்குடி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அரி என்னும் பெயர் கொண்டதிருவேங்கடடையான் துளப ரூபத்தில் திருவடிகள் மூலமாக குடிகொண்டமையால் இந்த ஊர் அரியக்குடியாயிற்று. தன் அரிய பக்தனுக்காக (சேவுகன்செட்டியார்) அரி அருளிய கோயிற்குடி அரியக்குடி ஆகும்.

அரியக்குடியில் திருவேங்கடடையான் தானே உவந்து வந்து எழுந்து அருளியதாலும், அவருடன் தென் திசையில் திருமலையில் (திருப்பதி) உள்ளதுபோல அலர்மேல்மங்கைத் தாயார் சன்னதி கொண்டிருப்பதாலும் தென் திருப்பதி என வழங்கப்படுகிறது. தென் திருப்பதி என்பது அரியக்குடியை மட்டுமே குறிப்பதாகும்.

திருப்பதி சென்று காணிக்கை செலுத்த இயலாத பக்தர்கள், இந்தத் திருத்தலத்திற்கு வந்து திருவேங்கடடையானை தரிசித்து காணிக்கை செலுத்தி வருவதாலும்,இத்திருத்தலம் தென் திருப்பதி என வழங்கப்படுகிறது.

தல புராணம்

Then Tirupathi Temple an Overviewநகராத்தார் மரபில் தோன்றிய சேவுகன் செட்டியார், திருப்பதி மலை வாழும் சீனிவாசப் பெருமானை வணங்கித் தியானம் செய்து வந்தார். அவர் தியானத்தில்இருக்கும்போது அவர் மீது நாகங்கள் நர்த்தனமிடும் காட்சியைக் காணப் பக்தர்கள் திரண்டனர்.

சேவுகன்செட்டியார், நோய் நொடிகள் நீக்கி, மக்கள் நலம் பெற அருள் வாக்குச் சொல்லி வந்தார். அவர் சொன்னது சொன்னபடி நடந்தது. இதனால்பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளையும், தன் வருவாயில் பெரும் பகுதியையும் உண்டியலில் சேமித்து வைத்து ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோணதினத்தன்று அரியக்குடியில் இருந்து திருப்பதிக்குப் பாதயாத்திரையாகச் சென்று திருவேங்கடடையானுக்குக் காணிக்கையாக செலுத்தி வணங்கி வந்தார்.

வயதான காலத்திலும் இப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு சமயம் உண்டியலுடன் திருமலையேறிச் செல்லும் போது களைத்து மயங்கி விழுந்துவிட்டார். தன் பக்தன் சோர்ந்து கீழே விழுவதைக் கண்ட எம்பெருமான் சேவுகன் செட்டியாரின் பக்தியை மெச்சி திருவேங்கடவனைத் தேடி வரும் பக்தனைத்திருவேங்கடவனே தேடி வருவான் என்று கூறி அதற்கான இடத்தையும் அறிவுறுத்தினார்.

பெருமாள் அருளிய இடமான அரியக்குடியில், சேவுகன் செட்டியார் திருவேங்கடடையானுக்கும் அலர்மேலு தாயார்க்கும் சன்னதி எழுப்பினார். அன்று முதல்திருப்பதி மலையின் வேங்கடவன் உறையும் அரியக்குடி தென் திருப்பதி எனச் சிறப்பிக்கப்பட்டது. அரியக்குடி கோயிலை எழுப்பும் போது கோயில் கட்டுதற்குரியஇடத்தை கருடாழ்வார் வானில் வட்டமிட்டுக் காட்டினார். அதனால் இங்கு மூலக்கருடன் சன்னதி உள்ளது. இதனை மக்கள் மூலைக்கருடன் என்றுகூறுவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X