ஆடி அமாவாசை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு! குவிந்த கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு புனிதத் தீர்த்தங்கள், நீர்நிலைகளில் குவிந்த மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாள், ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானவை. ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு முன்னோர்கள் நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம். அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் தர்ப்பணம் செய்வார்கள்.

Sprituality Amavasai

அந்தவகையில் ஆடி அமாவாசை நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளுடன் அமைந்துள்ள தலங்களில் புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு பின்னரே நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கன்னியாகுமரியில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்தனர். அதிகாலை முதலே புனித நீராடிய அவர்கள் பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, திருவையாறு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அதிகாலை முதலிலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் கடற்கரை மற்றும் தலசயன பெருமாள் கோயில் திருக்குளம் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து வந்து ஏராளமானோர் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பனம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+