திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது! சூரசம்ஹாரம் எப்போது? மிளகு விரதம் எதற்கு தெரியுமா?
சென்னை: இன்று கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இன்று முதல் நாள் விரதம் தொடங்குவது எப்படி என்பதை பார்க்கலாம். மேலும் குழந்தை பேறுக்காக காத்திருப்போர் மிளகு விரதம் இருக்க வேண்டும் என்பது ஐதீகம். அதை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என அழைக்கப்படுகிறது.

இதை மகா சஷ்டி என்றும் அழைக்கிறார்கள். முருகன், சூரனை வதம் செய்து தேவர்களை காத்த திருநாள் என்பதால் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு சப்தமி திதியில் நடக்கும் முருகனின் திருக்கல்யாணத்தையும் தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிலர் சஷ்டி வரை மட்டும் விரதம் இருப்பது வழக்கம்.
திருச்செந்தூரில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ளது. வரும் 27ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விரதம் இருப்போர் இன்று முதல் விரதத்தை தொடங்கியுள்ளனர். அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு விரதத்தை தொடங்கிவிட்டனர்.
காப்பு கட்டுவோர் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்புக் கட்டிக் கொண்டு விரதத்தை தொடங்கிவிட்டனர். இந்த விரதம் 28ஆம் தேதி வரை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி நாளில் மிளகு விரதம், இளநீர் விரதம் என பல உண்டு. இவை 7 நாட்கள் கடைப்பிடிப்பார்கள்.
விரதத்தின் போது காலையும் மாலையும் வீட்டில் முருகன் முன் அமர்ந்து கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, சண்முக கவசம் உள்ளிட்ட பாடல்களை பாடலாம். அதனுடன் கோயிலுக்குச் சென்று வழிபாடும் நடத்தலாம்.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என பலர் கூற கேட்டிருக்கிறோம். அதாவது குழந்தை பேறு இல்லாதவர்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை தங்கும் என்பதுதான் அந்த பழமொழியாகும். எனவே முருகனே தங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று எண்ணி சஷ்டியில் பலர் விரதம் இருந்து குழந்தை பேற்றை பெற்றிருக்கிறார்கள்.
சஷ்டியில் மிளகு விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். அதாவது சஷ்டி முதல் நாளில் ஒரே ஒரு மிளகு, தண்ணீர் குடித்து காலை உணவை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
2 ஆவது நாளில் 2 மிளகு+ தண்ணீர், 3ஆவது நாளில் 3 மிளகு என ஒவ்வொரு நாளும் மிளகின் எண்ணிக்கையை அதிகரித்து 6ஆவது நாள் 6 மிளகுகளை சாப்பிட்டு முருகனை வேண்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
திருச்செந்தூரில் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் 6 நாட்கள் சஷ்டி விரதமும் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27ஆம் தேதியும் நடைபெறுகிறது. அடுத்து 5 நாட்களுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது. இதற்காக திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications