நெல்லிமுள்ளி பொடி அதிர்ஷ்டம்.. இழந்த சொத்துக்களை மீட்டு தரும் நெல்லிக்காய் தீபம்.. நெல்லி அற்புதம்
சென்னை: நெல்லிக்காய் தினம் ஒன்று சாப்பிட்டு வருவதால் உடலில் எந்த நோயும் அண்டாது, ஆயுள் கூடும் என்பார்கள்... மருத்துவ குணங்கள் நெல்லிக்காயில் பலவாறாக உள்ளது போலவே, ஆன்மீக தன்மையும் எண்ணற்று காணப்படுகிறது. அந்தவகையில், நெல்லிக்காய் தீபம் ஏன் எப்படி ஏற்றப்படுகிறது தெரியுமா? நெல்லிமுள்ளி பொடியை என்ன செய்யலாம்? வீட்டில் பணப்பிரச்சனை தீர நெல்லிக்காயில் என்னவகையான பரிகாரம் செய்யலாம்? அவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நெல்லிக்காய் மரங்கள் லட்சுமி கடாட்சம் நிறைந்தவை என கருதப்படுவதால்தான, வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்ப்பது நல்லது என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, நெல்லிக்காயில் திருமால் வாசம் செய்வதாகவும் நம்பப்படுகிறது. எனவே, நெல்லி மரம் வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் வளர்க்கலாம்.

நெல்லிக்காய் மரம்
எக்காரணம் கொண்டும் தெற்கு பக்கத்தில் நெல்லி மரத்தை வளர்க்கக் கூடாது.. அப்படி வளர்த்தால், வீட்டு வளத்தை வெகுவாக பாதித்துவிடும்.. அதேபோல, ஒற்றை நெல்லி மரத்தையும் வீட்டில் வைக்கக்கூடாது என்பார்கள்.. எப்போதுமே இரண்டு மரங்களாக வளர்க்க வேண்டும்.
அதேபோல, பரிகாரங்களை செய்ய சிறந்த பொருளாக நெல்லிக்காய் விளங்குகிறது.. வீட்டில் கடன்பிரச்சனை, பணத்தட்டுப்பாடு இருந்தால், 6 நெல்லிக்காய்களை தனியாக எடுத்து, அதிலுள்ள சதைப்பகுதியை வெட்டி எடுத்து, வெறும் கொட்டைகளை மட்டும் வெயிலில் காய வைக்க வேண்டும்.
நெல்லிக்காய் பரிகாரம்
பிறகு ஒரு வெள்ளை துணியில் நெல்லிக்காய் கொட்டைகளை சேர்த்து முடிச்சாக கட்டி, வீட்டின் வட கிழக்கு திசையில் வைத்து விட்டால் போதும். இதனால், உங்களது நிதி நிலைமை சீராகி, தடைபட்ட வருமானமும் தடையின்றி கிடைக்கும்.
இந்த 6 கொட்டைகளை வருடம் ஒருமுறை மாற்றிவிட்டு, புதிய 6 கொட்டைகளை அதேபோல முடிச்சு போட்டு வைக்கலாம். வீடு மட்டுமல்லாமல் தொழில் செய்யும் இடத்திலும் வடமேற்கு மூலையில் கட்டி வைத்துவிடலாம். இதனால், தொழிலில் ஏற்படும் தடைகள் விலகிவிடும்.. ஆனால், இதனை வாரத்திற்கொரு முறை மாற்றிவிட வேண்டும்.
நெல்லிக்காய் தீபம்
அதேபோல, இழந்த அனைத்தையும் மீட்க வேண்டுமானால், நெல்லிக்காய் தீபம் ஏற்றலாம்.. இதற்கு நெல்லிக்காயின் மேற்புறத்தில் சிறிது பள்ளமாக தோண்டி கொள்ள வேண்டும். அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விட வேண்டும். இப்போது திரியை நெய்யில் நனைந்து, பிறகு அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்ற வேண்டும். விசேஷ நாட்களில் இப்படி விளக்கேற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம்.
அதேபோல, தீராத நோயில் அவதிப்படுபவர்கள், சிறுவாபுரி கோயிலுக்கு சென்று 48 நாட்கள், நெல்லி முள்ளி பொடி கொண்டு அபிஷேகம் செய்து வரவேண்டும்.. 48 நாட்களும் அங்கு செல்ல முடியாவிட்டாலும், கோவில் அர்ச்சகரிடம், அந்த பொடியை தந்து கொடுத்து அபிஷேகத்தில் சேர்க்க செய்யலாம். அந்தவகையில் நெள்ளிமுள்ளி அபார சக்தி கொண்டது.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
"ஓவர் திங்கிங் உங்களை மெதுவாக அழிக்கிறதா?... இந்த 5 விஷயங்களை செய்தால் வாழ்க்கையே மாறலாம்!" -
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications