புத்தரின் சிலையை இப்படி வையுங்க.. "இதை" தூக்கி வெளியே போட்டுருங்க.. அதிர்ஷ்டம் சூப்பரா அடிக்குமாம்
சென்னை: உங்கள் வீட்டில் வறுமை நீங்க வேண்டுமா? பணமும் மகிழ்ச்சியும் தங்க வேண்டுமா? குடும்பத்தில் சிக்கலும், சச்சரவும் விலக வேண்டுமா? அப்படியானால் வாஸ்து விவரங்களை சரியாக பின்பற்றினாலே அனைத்து இன்னல்களிலிருந்தும் விடை பெறலாம். ஒரு சில டிப்ஸ்களை பார்ப்போம்.
உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருக்கலாம்.. இந்த குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதனை நிவர்த்தியும் செய்து கொள்ளலாம். இதற்கு சில பரிகாரங்கள் கைகொடுக்கின்றன.

உதாரணத்துக்கு வீட்டிலுள்ள பகுதிகளில் எங்காவது வாஸ்து பலவீனமாக இருந்தால், அந்த இடத்தில் தினமும் 2 வேளை சங்கு ஊத வேண்டும். தினமும் காலை, மாலை என 2 வேளையும் சங்கு ஊதி வரும்போது, வீட்டில் நிலவும் குறைபாடுகள் விரைவில் சீராகும். ஒருவேளை சங்கு இல்லாவிட்டால், இறைவணக்கம் முடிந்ததும், மணி அடிக்கலாம்... வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்பட்டுவிடும்.
கல் உப்புக்கள்: அதேபோல, கல் உப்பினை, வீட்டின் வாயில் வைப்பதால், எதிர்மறை ஆற்றல் உள்ளே வராமல் தடுக்கப்படுகிறது. வீட்டின் மூலைகளிலும் கல் உப்பை ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கலாம். ஆனால், இதனை மாத மாதம் மாற்றி, புதிய கல் உப்பினை கொட்டி வைக்க வேண்டும்.
அதேபோல மொட்டை மாடியில் உபயோகப்படுத்தாத பொருட்களை போட்டு வைக்கக்கூடாது.. முக்கியமாக உடைந்த நாற்காலிகள், பழைய துடைப்பம், இரும்பு பொருட்கள் போன்றவைகளை போட்டு வைக்கக்கூடாது.. தேவையில்லை என்றால், உடனே அவைகளை தூக்கி வெளியே எறிந்துவிட வேண்டும். எப்போதுமே மாடியை சுத்தமாக பெருக்கி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் பூச்செடிகளை வளர்க்கலாம்.
தண்ணீர் சிக்கனம்: சமையலறையில் குழாயில் தண்ணீர் சிந்தவிடக்கூடாது.. கிச்சன் மட்டுமல்லாமல், குழாய்கள் எங்கெல்லாம் வீட்டில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சரியாக மூடி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் உடைந்த குழாய் இருக்ககூடாது. தண்ணீரில் சிக்கனம் இருந்தாலே, அதிர்ஷ்டம் எளிதாக வீட்டுக்குள் வரும் என்பார்கள்.
நாம் வாழும் வீட்டில் வாஸ்து தோஷங்களால்தான் அதிக பிரச்சனைகள் ஏற்படுகின்றன.. எனவே, வீடு கட்டும்போதோ அல்லது வாடகைக்கு வீடு பார்க்கும்போதே வடகிழக்கு மூலையில் கழிப்பறை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. தென்கிழக்கு திசையில் சமையலறை இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.அல்லது வடமேற்கு அல்லது கிழக்கு திசையில் சமையலறை இருக்கலாம்.
கழிவறை: அதேபோல, அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை அடைத்து வைக்கலாகாது. ஈசான மூலையில் கழிவறை இருக்கக்கூடாது. வீட்டு வாசலுக்கு எதிரேயே தண்ணீர் குழாய், கிணறு, அடி பம்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படியே எதிர்பாராத விதமாக அமைய நேர்ந்தால், தண்ணீருள்ள பகுதிகளில் மண்ணை தோண்டி, ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்கலாம். நின்று போன கடிகாரம், உடைசலான கடிகாரம் போன்றவற்றை வைத்திருக்கக்கூடாது..
வீட்டில் வளர்க்கக்கூடிய வாஸ்து செடிகள் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். துளசி, வாழை போன்ற வாஸ்து செடிகளை வீட்டில் வளர்க்கலாம். ரோஜாவை தவிர, முட்கள் நிறைந்த செடிகளை வீட்டிற்குள் வளர்க்கக்கூடாது.. இதனால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகுமாம். துளசி செடிக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன்மூலம் எதிர்மறை சக்திகளிலிருந்து காத்து கொள்ளலாம்..
புத்தர் சிலைகள்: வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அபரிமிதமாக அதிகரித்து காணப்பட வேண்டுமானால், புத்தர் சிலையை பயன்படுத்தலாம். வீட்டில் ஹால் அல்லது பால்கனியில் புத்தர் சிலைகளை வைக்கலாம். வாஸ்து படி, புத்தர் சிலையை கிழக்கில் வைக்க வேண்டும்.. இது சூரிய திசை எனப்படும் இந்த புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வாழ்வில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications