பழைய சாதம் காகத்துக்கு வைக்கலாமா? காகங்களுக்கு சாப்பாடு வைப்பது இத்தனை நல்லதா? இது மட்டும் வேணாம்
சென்னை: காகத்துக்கு பழைய சாதம் வைக்கலாமா? காகங்களுக்கு உணவு வைப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? கடன் தொல்லை தீர காகத்துக்கு எப்படி உணவளிக்கலாம்? உணவு வைக்கும் முறை என்ன? அனைத்தையும் சுருக்கமாக பார்க்கலாம்.
சனிபகவானின் வாகனமாக உள்ள காகத்திற்கு அமாவாசை தினங்களில் உணவு வைக்கப்படுகிறது. இறந்து போன ஆத்மாக்கள், காகத்தின் ரூபத்தில் வீடு தேடி வருவதாக நம்பப்படுகிறது. அதனால்தான், சனிக்கிழமைகளிலும் விரத தினங்களிலும் படையலிட்டு, காகத்திற்கு உணவு வைக்கப்படுகிறது.
இப்படி காகத்திற்கு வைக்கும்போது, அவை சாப்பிடாமல் சென்றுவிடலாம். இப்படி நாம் வைக்கும் உணவில் காகங்கள் வாய் வைக்காமல் போவது, முன்னோர்களின் கோபத்தை வெளிப்படுத்துவதாக அர்த்தம். எனவே, முன்னோர்களுக்கு திதியை தந்துவிட வேண்டும். தவறாமல் திதி தரும்போது, முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

கடன் தொல்லை: அதேபோல, தொடர்ந்து காகத்திற்கு சாதம் வைத்து வந்தால், கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லைகள் நீங்கும்.. எந்த துர்சக்தியும் உங்களை நெருங்காது.. புத்திர பாக்கியமும் கிடைக்கும். காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது. நம் வீட்டை சுற்றியிருக்கும் பூச்சி, புழுக்களையும், இறந்துகிடந்தாலும், காக்கைகள் அதனை அப்புறப்படுத்திவிடும். இதனால் நோய் தொற்றுகளையும் நம்மை அண்டவிட செய்வதில்லை.
ஆனால், காகத்திற்கு சாதம் வைக்கும்போது, பெண்கள் சுத்தமாக இருக்க வேண்டும். மாதவிலக்கு நேரத்தில், அல்லது கணவன் மனைவி ஒன்றாக இருந்துவிட்டோ, காகங்களுக்கு உணவு வைக்க கூடாது. குளிக்காமல் சாப்பாடு வைக்கக்கூடாது.. மிச்சமான உணவு, எச்சில் தட்டிலுள்ள உணவை காகங்களுக்கு வைத்தால், நீங்காத தோஷம் ஏற்பட்டுவிடுமாம்.
சனிக்கிழமை: சைவம் அசைவம் என்று பாரபட்சமில்லாமல் காகம் அந்த உணவை சாப்பிடும். நீங்கள் எந்த உணவை காகத்திற்கு வைத்தாலும் தவறு கிடையாது. சனிக்கிழமைகளில் எள் கலந்த சாதத்தை காகத்துக்கு படைக்கலாம்... அதேபோல, ஏழரை சனி நடக்கும்போது காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பதன் மூலம் ஏழரை சனியின் தாக்கம் சற்றே குறையும்.
எக்காரணம் கொண்டும் பழைய உணவுகளையும் காகத்திற்கு வைக்கக்கூடாது.. காகம் மட்டுமல்ல, பசுமாட்டிற்கும் பழைய சாதம் வைக்கக்கூடாது.. பழைய சாதம் இருந்தால், அதை நாய்க்கு வைத்துவிடலாம்.. எப்போதுமே, புதிய உணவை, இலையில் வைத்து காகங்களுக்கு படைக்க வேண்டும்.
வடித்த சாதம்: அதேபோல, வியாழக்கிழமை இரவு, வடித்த சாதத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும். வெள்ளிக்கிழமை காலையிலேயே, அந்த தண்ணீர் கலந்த சாதத்தை காகத்திற்கு வைக்கலாம். காகம் இதனை சாப்பிடும்போது, குடும்பத்துக்கு நன்மையே கிட்டும். சிறிய வாழையிலையில் சாதம், நெய், உப்பு, பருப்பு சாம்பார் சேர்த்து பிசைந்து, காகத்திற்கு வைக்கலாம். இதனால், குடும்பத்தில் ஒற்றுமை பெருக்கெடுத்து, நிதி நெருக்கடியும் சீராகும் என்பார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications