பூஜையில் அகல் விளக்கு உடைந்தால்? விளக்கு தவறி விழுவது நல்லதா? பழைய விளக்குகளை என்ன செய்வது? ஆன்மீகம்
சென்னை: வீடுகளில் பூஜையின்போது, சிலசமயம் விளக்குகள் தெரியாமல் கைதவறி கீழே விழுந்துவிடும்.. அதேபோல அகல் விளக்குகளும் கைநழுவி கீழே விழுந்துவிடும்.. இப்படி விளக்குகள் தவறி விழுவது நல்லதா? கெட்டதா? இதுகுறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
நம்முடைய வீட்டில், பல நேரங்களில் பூஜையின்போது சில பொருட்கள் கையிலிருந்து நழுவி கீழே விழுந்துவிடும்.. இதனால், சில பொருட்கள் தரையில் விழுந்தால் அது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை.

அபசகுணம்: ஆனால், தெரியாமல் நடக்கும் நிகழ்வு என்றாலும்கூட, சில பொருட்கள் கீழே விழுந்தால் அது துரதிருஷ்டமாகவும், அசுபமானதாகவும் கருதப்படுகிறது.
அந்தவகையில், அதிர்ஷ்டத்தின் சின்னமான குங்குமம், கீழே விழுந்தால், குடும்பத்திற்கு நல்லதல்ல என்பார்கள்.. பிரசாதம் தரையில் விழுந்தாலும், அது நல்லது கிடையாது. ஆர்த்தி தட்டு கைகளிலிருந்து நழுவி விழுந்தாலும் அது அபசகுணம் என்கிறார்கள். சாமி சிலைகள் கை தவறி விழுந்து உடைந்தால், குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு நெருக்கடி ஏற்படுமாம்..
அந்தவகையில், விளக்குகள் மிகவும் முக்கியமானவை.
மோசமான அறிகுறி: எரிந்து கொண்டிருக்கும் விளக்கு திடீரென அணைந்துவிடுவதுகூட மோசமான அறிகுறியாகும்.. ஏதோ வீட்டில் தவறாக நடக்கப்போவதை முன்கூட்டியே, இந்த விளக்குகள் உணர்த்துவதாகவும் நம்பப்படுகிறது. ஒருவேளை பூஜை செய்யும்போது, இப்படி விளக்குகள் அணைந்துவிட்டால், அந்த பூஜையை அப்படியே தொடரக்கூடாது.. மீண்டும் ஆரம்பத்திலிருந்து பூஜை செய்ய வேண்டும்.. இதுவே பரிகாரமும்கூட.
எனவே, விளக்குகள் உடைந்து விட்டாலோ அல்லது அந்த விளக்கில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டிருந்தாலும் அதை நாம் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.. புதிய விளக்குகளை தான் பயன்படுத்த வேண்டும்... பூஜைகளுக்கு பயன்படுத்திய அந்த பழைய விளக்குகளை சிலர் நினைவுகளுக்காக அப்படியே வைத்திருப்பார்கள். ஆனால், பூஜையில் அப்படி வைக்கக்கூடாதாம்..
அகல் விளக்குகள்: அதேபோல, குலதெய்வம் கோயிலுக்கு விளக்கேற்ற செல்லும்போது, சில அகல் விளக்குகள் உடைந்துவிடும். கடையில் வாங்கும்போது சரியாக பார்த்து வாங்காமல் செல்வதால் இப்படி நேரிடும்.. அப்படி விளக்கேற்றி வழிபடும்போது, இந்த விளக்குகள் விழுந்து உடைந்துவிட்டால், பரிகார தீபம் ஏற்ற வேண்டும்.. எனவே, அகல் விளக்குகளை வாங்கி செல்லும்போதே பார்த்து வாங்கினால் போதும்.. கவனக்குறைவால் உடைந்ததற்கெல்லாம் பயப்பட தேவையில்லை என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications