பிப்ரவரி மாத ராசி பலன் 2024: அடியோடு மாறப்போகும் வாழ்க்கை.. பண மழையில் நனையும் ராசிக்காரர்கள்
சென்னை: பிப்ரவரி மாதத்தில் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் புது கூட்டணி உருவாகிறது. சூரியன் செவ்வாய் கூட்டணி மாத பிற்பகுதியில் பிரிகிறது. 13ஆம் தேதிக்கு மேல் சனியோடு கும்ப ராசியில் பயணம் செய்வார் சூரியன். நவ கிரகங்களின் புது கூட்டணியால் மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கும் பிப்ரவரி மாதத்தில் என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மகரம்: ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக செயல்படுவதும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தான அதிபதியும் தைரிய ஸ்தான அதிபதியுமான குரு பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்தவும். உணவு விஷயத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கணவன் மனைவியிடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைக சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும்.
மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசி அதிபதி சனியோடு இரண்டாம் இடத்தில் கூட்டணி சேருவதால் பேசும் வார்த்தைகளில் கவனமும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.
கும்பம்: சூரியன் செவ்வாய் உடன் இணைந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் காலத்தில் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த சிறு சிறு பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். புது நபர்களுடன் பேசி பழகும் போது பேச்சில் கவனம் அவசியம்.
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். உடல் நலனில் பிரச்சினைகள் வந்து நீங்கும். மாத பிற்பகுதியில் பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் குறையும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு தொழில் வியாபாரத்தை பெருக்கி கொள்ள முடியும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்: உங்கள் ராசி அதிபதி குரு பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். ராசியில் ராகு சஞ்சரிப்பதாலும் மாத கோளான சூரியன் செவ்வாயுடன் இணைந்து இம்மாதம் 13ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதாலும் நல்ல பணவரவுகள் வரும். உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.
எதிர்பார்த்த வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் தேடி வரும். பொருளாதார மேன்மையால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஆரோக்கியத்தல் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மட்டும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications