இறந்தவர்கள் வீட்டுக்கு வர்றாங்களா? உயிரிழந்த பெற்றோர் கனவில் வந்தால்? இது மட்டும் கனவில் வரக்கூடாது
சென்னை: இறந்தவர்கள் கனவில் வருவது நல்லதா? கெட்டதா? இறந்தவர்கள் வீட்டுக்குள் வருவதுபோல கனவு வந்தால் என்ன பலன்? இறந்தவர்கள் சடலமாக இருப்பதுபோல் கனவில் வந்தால் என்ன பலன்? ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.
பொதுவாக, யாராவது இறந்து போவது போல கண்டால், நம்முடைய கஷ்டங்கள் துன்பங்கள் விலகப்போகிறது என்று அர்த்தமாம்.. அதாவது, இறந்து போனவர்களுக்கு ஆயுள் கூடும் என்பது இதன் பொருளாகும்.

என்ன பலன்: உயிரிழந்த உறவினர்களுடன் , சிரித்து பேசுவது போல கனவு வந்தால் உங்களுக்கு விரைவில் பேரும், புகழும் கிடைக்க போகிறது, துன்பங்களை போக்குவதற்கு அவர்கள் உதவி செய்யப்போகிறார்கள் என்று அர்த்தம். உயிரிழந்த உறவினர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து சாப்பிடுவது போல கனவு வந்தால் நமக்கு நற்பெயரும் செல்வ செழிப்பும் ஏற்படப்போகிறது என்று அர்த்தமாகும்.
இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால், நெருக்கடி நேரத்தில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்களாம். பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
பெற்றோர்: இறந்துபோன அம்மா, அப்பா இருவரையுமே கனவில் கண்டால் வரப்போகும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்கவே அவர்கள் வந்திருக்கிறார்களாம். இறந்து போன உங்கள் அப்பா உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள். அதேபோல, இறந்து போன உங்கள் அம்மா, கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
இறந்து போனவர்கள் உங்கள் வீட்டிற்குள் தூங்குவதை போல கனவு கண்டால், பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துவிடுவீர்கள் என்று பொருள். இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் விரைவில் பேரும் புகழும் கிடைக்க போகிறது என்று பொருள்.
சவப்பெட்டி: சவபெட்டி கனவில் வரக்கூடாதாம்.. அப்படி வந்தால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம். அதேபோல இறந்தவர்கள் நம்முடைய கனவில் வந்து அழுதால், அது நல்லதில்லை என்கிறார்கள். அதேபோல, தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்... நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடுமாம். நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications