Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் ரிஷபத்தில் பயணிக்கும் குரு.. யாருக்கு கோடீஸ்வர யோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மே மாதம் 1ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான் பரிகாரத்தலங்களில் லட்சார்ச்சனை விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. குருபகவானின் இடப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை நடைபெறும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

குரு பகவான்: நவகிரகங்களின் குரு பகவான் பொன்னவன் என்று போற்றப்படுகிறார். குருவின் பார்வை பொன்னான பலன்களைத் தரும் என்பதால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. தனக்காரகனும், வேத-ஞானக் கல்விக் கிரகமான குருபகவான் கடந்த ஆண்டு நிலையாக மேஷ ராசியில் பயணம் செய்தார். இந்த ஆண்டு குரு வளையம் எனப்படும் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

Guru peyarchi palan 2024 in tamil: Guru peyarchi when? prediction and remedies for 12 zodiac signs

12 ஆண்டுகளுக்குப் பின் ரிஷப குரு: குருபகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் நாட்டின் பொருளாதார நிலை சற்றே உயரும். தடுமாறிக் கொண்டிருந்த வங்கிகளின் நிதிநிலை அதிகரிக்கும். தங்கத்தில் அதிகமானவர்கள் முதலீடுகள் செய்வார்கள். சிமெண்ட், உரம், இரும்பு இவற்றின் விலை உயரும். வேலை வாய்ப்பு பெருகும். விலைவாசி அதிகரிக்கும்.

யாருக்கு பாதிப்பு: குரு பகவான் ரிஷப அமரப்போவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களும் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளில் விழுவதால் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும். குருபகவான் பாதகமான இடங்களில் பயணம் செய்பவர்கள் பணம், வேலை விசயங்களில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எதையும் முன்யோசனை இல்லாமல் செய்யக் கூடாது. அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டு அவதிப்படக்கூடாது.

நலம் பெறும் ராசிக்காரர்கள்: இந்த குருப்பெயர்ச்சியால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. குறிப்பாக பண வருமானம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். திருமண யோகம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். குருவின் பயணத்தாலும் குருபகவானின் பொன்னான பார்வையாலும் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கைகூடி வரும்.

குரு பரிகாரத்தலங்கள்: நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் விளங்குகிறது. தென் திட்டை ராஜ குரு, பாடி திருவலிதாயம் குருபகவான் ஆலயங்கள் பரிகாரத்தலங்களாக உள்ளன. குருவித்துறை குருபகவான் ஆலயங்களில் லட்சார்ச்சணை செய்ய செய்யப்படும். குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

பரிகாரம் யாருக்கு: அந்தவகையில் வரும் மே 1ஆம் தேதி குருபகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் குரு பரிகாரத்தலங்களில் நடைபெறும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து பயன் பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+