அனுமன் ஜெயந்தி - நாமக்கல்லில் தயாராகும் ஒரு லட்சத்து எட்டு வடைகள்..என்னென்ன அபிஷேகங்கள்
நாமக்கல்:
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மார்கழி மாத அமாவாசை நாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அனுமன் ஜெயந்தியாக தென் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் திருக்கோவில் . மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அனுமன் ஜெயந்தி விழா நாளன்று சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்படும். அந்த வகையில் இந்தாண்டு வருகிற 23ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட உள்ளது.

10008 வடைமாலை
இந்த வடை மாலையை தயாரிக்கும் பணி நேற்று முதல் கோயில் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளி சேர்ந்த ரமேஷ் தலைமையிலான 32 பேர் கொண்ட குழுவினர் அனுமனுக்கு சாத்தப்படும் வடைகளை தயாரித்து வருகின்றனர். அனுமன் ஜெயந்திக்காக ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணியில் 2025 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், தலா 32 கிலோ மிளகு சீரகம் ,125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பொருட்களை சுத்தம் செய்து மாவரைத்து வடை செய்யும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறும் என்றும் இப்பணி வருகிற 22ஆம் தேதி காலை நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாமம் சொல்லுங்கள்
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்க வேண்டும். அன்று நாள் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல உருகி விடும்.

குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் முடியும்.

துளசி மாலை
ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

சொல்லின் செல்வன்
அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் இருக்கும் ராமர் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications