For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை..உத்தரவை வாபஸ் பெற்ற கேரளா அரசு

Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து பக்தர்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என கேரள அரசு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பழைய நடைமுறைப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தான் அனுமதிக்கப்படுகின்றனர். 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கேரளா அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தான் அனுமதிக்கப்படுகின்றனர். 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த பல ஆண்டுகால நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பிரியாவுக்கு தவறான சிகிச்சை..சாட்சிகளை கலைக்க மாட்டோம்.. மருத்துவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல் பிரியாவுக்கு தவறான சிகிச்சை..சாட்சிகளை கலைக்க மாட்டோம்.. மருத்துவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல்

சபரிமலை

சபரிமலை

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு வயது வித்தியாசமின்றி அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனை செய்யலாம் என தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற இளம்வயது பெண்கள் தடுக்கப்பட்டனர். அவர்களும், அவர்களுக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும் போராட்டங்கள் நடத்த கேரளாவில் பெரும் பதற்றமே நிலவியது.

உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள்

உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள்

இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப ஒப்புகொண்டது. இந்த விசாரணை இன்றும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கியது. இதனையொட்டி நேற்று முதல் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

வழிகாட்டு நெறிமுறை அறிக்கை

வழிகாட்டு நெறிமுறை அறிக்கை

இந்த நிலையில், கேரள காவல்துறை சபரிமலையில் பணியாற்றும் போலீசார் பின்பற்ற வேண்டிய நெறிமுறை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், போலீசார் என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டுள்ளது. பக்தர்களிடம் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என பல விதமான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதில் 28-09-2018 உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என கேரள அரசு குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கை தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தேவசம் போர்டு எதிர்ப்பு

தேவசம் போர்டு எதிர்ப்பு

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அனுமதியளித்தும், தேவசம் போர்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேலும் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த அறிக்கை கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி அறிந்த கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் அவரது பேஸ்புக் பக்கத்தில் அதிரடி கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் பதிவு

ஃபேஸ்புக் பதிவு

அதில், கேரள அரசு இது போன்ற முடிவுகள் எடுத்தால் கடந்த காலத்தில் ஏற்பட்டது போல் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பதிவிட்டிருந்தார். இவரின் பேஸ்புக் பதிவை அறிந்த காவல்துறை ஏடிஜிபி அஜித்குமார், அந்த பகுதி நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். மேலும், பழைய புத்தகத்தை அச்சிட்டதால் தவறு நேர்ந்ததாகவும், இதனால் அந்த கையேட்டினை திரும்ப பெற்று புதிய கையேட்டினை வழங்கவும் உத்தரவிட்டார்.

கேரளா அரசு அனுமதி

கேரளா அரசு அனுமதி

மேலும், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரளா அரசும், தேவசம் நிர்வாகமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறிய தேவஸ்தான அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன், இது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுகட்டம் என விளக்கமளித்துள்ளார். மேலும், அந்த தவறான கையேட்டு திரும்ப பெறப்படும் என தெரிவித்தார்.

உத்தரவு வாபஸ்

உத்தரவு வாபஸ்

எனவே பழைய நடைமுறைப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தான் அனுமதிக்கப்படுகின்றனர். 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

English summary
The Kerala government had mentioned in the statement that it should follow the decision of the Supreme Court to allow all devotees to enter Sabarimala. This issue has created a stir now. According to the old practice, only girls below 10 years of age and women above 50 years of age are allowed inside the Sabarimala Ayyappan Temple. The Kerala government has announced that women between the ages of 10 and 50 are not allowed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X