For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலை கோவிலில் மண்டல பூஜை நவ.17 முதல் ஆரம்பம்..ஐயப்ப பக்தர்களுக்கு என்னென்ன ஏற்பாடுகள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்களை பணியில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை 1ஆம் தேதி முதலே பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக விரதம் இருப்பார்கள்.

இந்த நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இம்முறை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனின் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை வருது! சபரிமலை யாத்திரைக்கு தயாராகும் ஐயப்ப பக்தர்களே.. நீங்க கவனிக்க வேண்டியது இவை தான்! கார்த்திகை வருது! சபரிமலை யாத்திரைக்கு தயாராகும் ஐயப்ப பக்தர்களே.. நீங்க கவனிக்க வேண்டியது இவை தான்!

கூடுதல் பாதுகாப்பு

கூடுதல் பாதுகாப்பு

இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் இம்முறை கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்களை பணியில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 டிரோன் காமிராக்கள்

டிரோன் காமிராக்கள்

டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உணவுப்பொருட்கள் பட்டியல்

உணவுப்பொருட்கள் பட்டியல்

இதற்கிடையே சபரிமலை வரும் பக்தர்களுக்கு நியாயமான விலையில் உணவு பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இப்போதே ஒவ்வொரு உணவு பொருளின் விலையையும் அவர்கள் அறிவித்து உள்ளனர். அதன்படி முக்கிய உணவு பண்டங்களின் விலை விபரம் வருமாறு:- டீ-ரூ.13, காப்பி-ரூ.13, பருப்பு வடை-ரூ.15, உளுந்த வடை-ரூ.15, போண்டா-ரூ.15, தோசை- ரூ.13, இட்லி-ரூ.13, சப்பாத்தி-ரூ.14, புரோட்டா-ரூ.15, இடியாப்பம்-ரூ.14. சாதம்-ரூ.75, வெஜிடபிள் பிரியாணி-ரூ.75க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையின் ஆன்லைன் செயலி

வனத்துறையின் ஆன்லைன் செயலி

இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எருமேலி - பம்பை மற்றும் வண்டிப்பெரியார்- சபரிமலை பாரம்பரிய பெருவழிப்பாதை வழியாக சபரிமலைக்கு நடைபயணமாக வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்படும். இதன் பயன்பாடு இந்த சீசன் முதல் அமல்படுத்தப்படும் என்று கூறினார்.

வன விலங்குகள் நடமாட்டம்

வன விலங்குகள் நடமாட்டம்

பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதே இதன் நோக்கம். வனப்பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்கள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் பெருவழிப்பாதைகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கெங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பதையும் இந்த மொபைல் செயலி மூலம் பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த ஆண்டு வனப்பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 அவசர சிகிச்சை மையங்கள்

அவசர சிகிச்சை மையங்கள்

இந்த நிலையில் கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பம்பை, எருமேலியில் பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள மருத்துவ வசதிகள், மருந்தகங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள மருந்துகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது, பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கி.மீ தூரத்தில் 18 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது என்றும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

English summary
It has been announced that Mandala Pooja will begin on the 17th at the Sabarimala Ayyappan temple. For this, the Ayyappan temple walk will be opened on the 16th at 5 pm. Arrangements have also been made to deploy commando soldiers for the protection of devotees from the pump to Sannithanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X