For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கால் கொலுசு..டாலர் சங்கிலி..அலங்கார ரூபினியாக அபயாம்பிகை.. யானைக்கு பொன்விழா எடுத்த மயிலாடுதுறை மக்கள்

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் அபயாம்பிகை யானை ஆலயத்திற்கு வருகை தந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சீர்வரிசை எடுத்து வந்து ஊர் மக்கள் பொன்விழா கொண்டாடினர். யானையின் காலில் கொலுசு கழுத்தில் டாலர் அலங்கார மணி என அணிந்து அலங்கார ரூபினியாக வலம் வந்த அபயாம்பிகைக்கு சிறப்பு கலசபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. கரும்பு பொரிகடலை பழங்கள் காய்கறிகள் வெல்லம், ஐஸ்கிரீம் வழங்கி மக்கள் பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.

Mayiladuthurai people celebrated Abayambikai elephant golden jubilee function

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் பதியம் பெற்ற 2000 ஆண்டு பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972 ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது.

மயிலாடுதுறை மக்களின் செல்ல பிள்ளையாக மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களில் முன்னே செல்வது வழக்கம். இந்த யானையை மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர் யானையை பராமரித்து வருகின்றனர்.

யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொதுமக்களும் யானை ரசிகர்களும் நேற்று விழாவாக கொண்டாடினர். பொன்விழாவை முன்னிட்டு புனித நீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து அதில் புனித நீர் குடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது. இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

Mayiladuthurai people celebrated Abayambikai elephant golden jubilee function

காலில் கொலுசு கழுத்தில் அடையாள சங்கிலி மற்றும் டாலர் அணிவிக்கப்பட்டு முகபடாம் மற்றும் புத்தாடைகளுடன் யானை புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. தொடர்ந்து கரும்பு அச்சு வெல்லம் பொரிகடலை பழ வகைகள் கிழங்கு வகைகள் இனிப்புகள் பண் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையாக எடுத்து வந்து பாசத்துடன் யானைக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் யானையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்.. அரை மணி நேரத்தில் முடிந்த ரிசர்வேசன் திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்.. அரை மணி நேரத்தில் முடிந்த ரிசர்வேசன்

பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் யானையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் போது செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம் கூறுகையில், மயிலாடுதுறையில் மயில் சிவனை பூஜித்த சிறப்பான தலம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம். இங்கே அபயாம்பிகை என்ற பெயர் சூட்டப்பட்ட பெண் யானை கோயிலுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொன்விழா ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. ஆயுள் ஹோமம், கலசபிஷேகம் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றுள்ளது என்றும், அனைவரும் இறையருள் பெற வேண்டும் என்று கூறினார்.

காடுகளில் உள்ள யானைகள் உணவு இல்லாமல் நகரங்களில் உள்ள வீடுகளில் புகுந்து சேதப்படுத்துகிறது. திருக்கோயில்களை கட்டி வைத்து அரசர்கள் கோயிலுக்கு யானைகளை கொடுத்துள்ளனர். அதுபோல் தமிழ்நாடு அரசும் அனைத்து கோயில்களுக்கும் யானைகளை வழங்கி பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

English summary
The people of Mayiladuthurai celebrated the Golden Jubilee by marching in procession to mark the completion of 50 years of visiting the Abhayambikai Elephant Temple of Mayuranathar Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X