
திங்கட்கிழமை இதை செய்யுங்கள்.. நினைத்த காரியம் நிறைவேறும்..வெற்றிகள் தேடி வரும்!
சென்னை: காரிய வெற்றிக்காக காலம் காலமாக போரடி வருகின்றனர். நினைத்த காரியம் நிறைவேற கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைப்பார்கள். நினைத்தது நிறைவேறவும் காரிய வெற்றி உண்டாகவும் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். திங்கட்கிழமைகளில் அந்த பரிகாரத்தை செய்தால் நினைத்தது நிறைவேறும்.
திங்கட்கிழமை சிவன் வழிபாட்டுக்கு விசேஷமான நாள். இந்த நாள் சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. சிவனின் அருளைப் பெறுவதற்காக பலரும் திங்கட்கிழமை விரதம் கடைப்பிடிக்கின்றனர். சிவனின் அருளைப் பெற, திங்கட்கிழமைகளில் செய்யும் சில பர்காரங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றியை தேடித் தரும்
நீண்ட காலமாக நிறைவேறாத விருப்பங்களை நிறைவேற, திங்கட்கிழமை அன்று, 21 வில்வ இலைகள் மீது ஓம் நம சிவாய என்று எழுதுங்கள். அதன் பிறகு சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யுங்கள். உங்களுடைய தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
7 வருவாய் கிராமங்கள்! 813 குடும்பங்கள்! தலா ரூ.4800 நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

திங்கட்கிழமை தேங்காய் பரிகாரம்
வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து எதிர் நீச்சல் போட்டுக்கொண்டே இருபவர்கள் ஒரே ஒரு முறை விநாயகரை வணங்கி இந்த பரிகாரத்தை செய்தால் போதும். அப்புறம் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் என்பதே வராது. திங்கட்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய தொடங்க வேண்டும். திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இது. திங்கட்கிழமை முதல் நாள் ஒரு தேங்காய். செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாள் இரண்டு தேங்காய். இப்படியாக வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாள் ஐந்து தேங்காய் வரை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

சிதறு தேங்காய்
இந்த பரிகாரம் செய்வதற்கு மொத்தமாக 15 தேங்காய்கள் வேண்டும். தேங்காய்களை வாங்கி உங்கள் வீடு பூஜை அறையில் வைத்து விடுங்கள். திங்கட்கிழமையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய நீங்கள் தொடங்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை காலை எழுந்து குளிக்க வேண்டும். பூஜை அறையில் வாங்கி வைத்திருக்கும் ஒரு தேங்காயை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி இதை பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச் சென்று அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்துவிட்டு சிதறு தேங்காய் உடைத்து விட்டு விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும்.

5 நாட்கள் பரிகாரம்
செவ்வாய்க்கிழமையும் இதே போல் தான் செய்ய வேண்டும். புதன், வியாழன், வெள்ளி, என தொடர்ந்து 5 நாட்களும் இதேபோல்தான் வழிப்பாட்டை செய்ய வேண்டும். ஆனால் உங்களுடைய தேங்காயின் எண்ணிக்கை மட்டும் திங்கட்கிழமை ஒன்று செவ்வாய்க்கிழமை இரண்டு தேங்காய் புதன்கிழமை 3 தேங்காய் என அதிகரிதுக்கொண்டே இருக்கனும்.

கஷ்டங்கள் விலக பரிகாரம்
இறுதியான நாள் 5 தேங்காயை எடுத்துக் கொண்டு போய் விநாயகருக்கு சூரை தேங்காய் போட்டு விட்டு அருகம்புல்லால் அர்ச்சனை செய்துவிட்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும். நினைத்த காரியம் நிறைவேற ஒரே ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் விலகிவிடும்.

சிவலிங்கத்திற்கு அபிஷேகம்
குழந்தை செல்வத்தை பெற, திங்கட்கிழமை, கோதுமை மாவினால் 11 சிவலிங்கம் உருவாக்கவும். அதன் பிறகு அதனை 11 முறை அபிஷேகம் செய்யவும். திங்கட்கிழமை, வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபட்டால் செல்வ வளம் பெருகும். திங்கட்கிழமையன்று சிவனுக்கு எள் மற்றும் பேரிச்சம்பழம் படைக்கவும். இது பாவங்களிலிருந்து உங்களை விடுவிக்கிறது மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

அன்னதானம்
திங்கட்கிழமை ஏழைகளுக்கு உணவு தானம் செய்வதால் அன்னபூரணி எப்போதும் வீட்டில் வாசம் செய்கிறாள். மேலும் உணவுக்கு பஞ்சம் என்பதே ஏற்படாது. திங்கட்கிழமை நந்தி காளைக்கு பச்சைப் புல் கொடுப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். இத்துடன் பணம் தொடர்பான பிரச்சனையும் நீங்கும். திங்கட்கிழமை அன்று சிவனுக்கு ருத்ராபிஷேகமும் செய்யலாம். இதன் மூலம் அகால மரணம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

நோய்கள் நீங்கும்
குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், திங்கட்கிழமை அன்று பஞ்சாமிர்தத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சிவன் அருளால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
திங்கட்கிழமையன்று ஏதேனும் சிவன் கோவிலில் கரும்பு சாறினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வறுமை நீங்கி நன்மை உண்டாகும். நீண்ட காலமாக நிறைவேறாத விருப்பங்களை நிறைவேற்ற, திங்கட்கிழமை அன்று, 21 வில்வ இலைகள் மீது ஓம் நம சிவாய என்று எழுதுங்கள். அதன் பிறகு சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யுங்கள்.