சாமியே சரணம் ஐயப்பா..மண்டல பூஜைக்கு சபரிமலை போகும் பக்தர்களே..ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்
சபரிமலை: கார்த்திகை மாதம் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sabarimalaonline.org என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து பய பக்தியோடு ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். பாதை யாத்திரையாக சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் எங்கும் எதிரொலிக்கும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே சபரிமலையில் பக்தர்கள் குறைவான அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மண்டல பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை அடைக்கப்படும்.

மகர விளக்கு பூஜை
இதனைத்தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை நடை திறக்கப்பட்டு, 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை சாத்தப்படும். ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.

ஆன்லைன் முன்பதிவு
சபரிமலைக்கு செல்லவுள்ள பக்தர்கள் சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sabarimalaonline.org என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம். இந்த நிலையில், மண்டல பூஜை தரிசனத்திற்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

லட்சக்கணக்கான பக்தர்கள்
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் வரும் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும்.

ஐப்பசி மாத பூஜை நடை திறப்பு
ஒவ்வொரு மாதமும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக, வரும் 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து, விளக்கேற்றி தீபாராதனை நடத்தவுள்ளார். கோயில் நடை வரும் 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications