இன்று சனி வக்ர நிவர்த்தி.. பட்ட பாடெல்லாம் விலகும்.. இந்த ராசிக்காரர்களுக்கு இனி கொட்டப்போகுது பணம்
சென்னை: சனி பகவான் இன்று நவம்பர் 15ம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார்.. 139 நாட்கள் வக்ர நிலையில் இருந்த அவர் இன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். பகவானின் வக்கிர நிவர்த்தி மூலம் சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
இன்று நவம்பர் 15ம் தேதி சனி கும்ப ராசியில் நேரடி சஞ்சாரம் செய்ய உள்ளது... வழக்கமாக, அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், கும்ப ராசியில் வக்ர நிலையிலிருந்து தற்போது வக்ர நிவர்த்தி அடைகிறார்.. இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

எனவே, இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும் என்கிறார்கள்.. எனினும், சில ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான நன்மைகள் பல ஏற்படும்... அதிர்ஷ்டமும், ஜாக்பாட்டும் இவர்களுக்கு அடிக்கும். அந்த ராசிக்கார்கள் யார் யார் தெரியுமா?
மேஷ ராசி: முதலில் மேஷ ராசிக்காரர்களை சொல்லலாம்.. இதுவரை இவர்கள் பட்ட கஷ்டம் மெல்ல விலகும்.. இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கும் வேலை கிடைத்துவிடும்.. இதுவரை திருமணம் நடக்காதவர்களுக்கும் திருமணம் நடக்கும்.. தொழில் செய்வோர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.. உடல் ஆரோக்கியமும் தழைக்கும். அந்தவகையில், மேஷ ராசிக்கு லக்னத்திற்கு அதிபதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து எல்லா பலன்களை வழங்கப்போகிறது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு, பொருளாதார ரீதியான பலம் கிடைக்கும்.. வாழ்க்கைத் துணையுடனான புரிதல் மேலோங்கும்.. ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கலாம். ரிஷப ராசிக்கு 10வது இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால், சஷ மகா புருஷ யோகம் உண்டாகும். எனவே, சனி பகவானால் தடைபட்ட அனைத்து யோக பலன்களும் மீண்டும் கிடைக்கும்..
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.. நல்ல வேலையில் அமரக்கூடும்.. தொழில் செய்வோர்களுக்கும் லாபம் கிடைககும்.. குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். எதிரிகளின் தொல்லையும் ஒழியும்.. அலுவலகத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு தேடி வரும். உடல்நலப் பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம்.. அதேபோல, பழைய கடன்கள் அல்லது தகராறுகளில் இருந்தும் விடுபடலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை ஏற்பட்டுவந்த தடைகள் விலக போகிறது. சனியின் வக்ர யாகத்தால் அனைத்து சூழல்களும் சாதகமாக வரப்போகிறது. தடைபட்டு வந்த திருமணம் நடக்கும்.. அதுவும் காதல் திருமணமும் நடக்கலாம்.. வருமானம் கூடும். பழைய முதலீடுகள் மூலம் லாபமும் கிடைக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களும் நல்ல லாபத்தை பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
தனுசு ராசிக்காரர்கள்: தனுசு ராசிக்காரர்களுக்கும் சாதகமான நன்மைகள் ஏராளமாக ஏற்படும். குடும்பத்தில் பொருளாதார வரவு அதிகரிக்கும். பெரியவர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும். இன்று முதல் பேரும், புகழும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் தழைக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முதல் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்க போகின்றன.. ஊதிய உயர்வு வரலாம்.. வியாபாரத்திலும் நல் முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். அதுமட்டுமல்ல, புதிய திட்டம் அல்லது கல்வி அல்லது தொழிலில் சேர்ந்தால். சனியின் நேரடி சஞ்சாரம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும்.. இது வெற்றிக்கு வகுத்து தரும்.
மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு இதுவரையில் இருந்த தடைகள் அத்தனையும் நீங்கும். வருமானம் உயரக்கூடும்.. திருமணம் முயற்சிகள் கைகூடும்.. வேலை இல்லாதவர்களுக்கும் வேலை கிடைத்துவிடும்.. நீண்ட கால திட்டங்களை நிறைவேற்ற இந்த நேரம் மிகவும் நல்லது. அந்தவகையில், இன்றுமுதல் அனைத்து சிக்கல்களும் தீரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications