For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாப்பிடும் போது இந்த தவறுகளைச் மறந்தும் செய்து விடாதீர்கள் - ஆன்மீக ரகசியங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சாப்பிடும் சாப்பாட்டை பொறுமையாக மென்ற பின்பு தான் விழுங்க வேண்டும். நொறுங்கத்தின்றால் நூறு வயது வாழலாம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். அவசர அவசரமாக உணவை விழுங்கினால் தேவையற்ற உடல்நல கோளாறுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நாம் சாப்பிடும் போது எத்தகைய முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் சாப்பாடு என்றால் மிக மிக பிடித்தமான ஒன்று. உணவே பிரதானம் என்று சொல்வார்கள். அப்படி சாப்பிடும் போது அந்த சாப்பாட்டிற்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

உணவுக்கு மரியாதை கொடுத்தால் தான் கண்டிப்பாக நாம் ஆரோக்கியமாக மற்றும் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழலாம். சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் சாப்பிடும்போது அன்னபூரணி தாயை வணங்கி விட்டு சாப்பிட வேண்டும்.

உணவுக்கு மரியாதை

உணவுக்கு மரியாதை

சாப்பிடும் பொழுது பொதுவாக சில விஷயங்களை செய்யக்கூடாது என்கிற சாஸ்திரங்கள் உண்டு. குறிப்பாக ஒருவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பூஜை அறையில் செய்யக்கூடாத விஷயங்களும் உண்டு. சாப்பிடும் பொழுது கையை கீழே ஊன்ற கூடாது என்று கூறுவார்கள். கையை கீழே ஊன்றிக் கொண்டே சாப்பிட்டால் சாப்பிடும் சாப்பாடு உடம்பில் ஒட்டாது என்று நம் முன்னோர்கள் கூறியிருப்பார்கள்.

உணவு ஆரோக்கியம்

உணவு ஆரோக்கியம்

இன்றைக்கு டைனிங் டேபிள் வந்து விட்டது. என்னதான் நாகரீக காலமாக இருந்தாலும் தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றல் உடல் முழுவதும் வேகமாக பரவுவதில் தடை ஏற்படுகிறது.

கைகளை கழுவுங்கள்

கைகளை கழுவுங்கள்

சாப்பிடும் முன் இரு கைகளையும் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்த பின்பும் இரு கைகளையும் நன்றாக கழுவ வேண்டும். சாப்பிடும் போது இடது கையை பயன்படுத்தி சாப்பிடக்கூடாது வலது கையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் நமக்குதான் நலனும் நமக்குதான்.

சிந்தாமல் சாப்பிடுங்கள்

சிந்தாமல் சாப்பிடுங்கள்

சாப்பாடு தரையில் கொட்டக்கூடாது மற்றும் கோபமாக சாப்பிடக்கூடாது இரு கைகளால் பிசைந்து சாப்பிட கூடாது என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் உணவை தரையில் சிந்தாமல் சாப்பிட பழகி விட வேண்டும். கைகளால் எடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

கோபம் வேண்டாம்

கோபம் வேண்டாம்

சாப்பிடும் போதும் சமையல் அறையில் உணவு சமைக்கும்போதும் கோபமாக சமைக்கக்கூடாது பெண்கள் மிக நிதானமாக ரசித்து ருசித்துச் சமைக்க வேண்டும் அதேபோல் உணவு சாப்பிடும் போதும் அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.

இதை செய்யாதீர்கள்

இதை செய்யாதீர்கள்

சாப்பிடும் பொழுது தலையில் எண்ணெய் வைத்திருக்கக் கூடாது. குளிப்பதற்காக தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒருபோதும் சாப்பாட்டை தொடக்கூடாது. தலையில் எண்ணெய் வைத்திருக்கும் பொழுது ஒருவரை வழி அனுப்புவதும் கூடவே கூடாது.

பூஜை அறையில் விளக்கு

பூஜை அறையில் விளக்கு

சாப்பிடும் போது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அதை குளிர்விக்கக்கூடாது சாப்பிட்டு முடித்த பின்னர்தான் பூஜை அறையில் விளக்கை குளிர்விக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிட அமரும் முன்பாகவே விளக்கை குளிர்வித்து விட வேண்டும். இந்த சம்பிரதாயங்களை எல்லாம் நம் முன்னோர்கள் கடைபிடித்த காரணத்தினால் அவர்கள் ஆரோக்கியமாகவும் கஷ்டமில்லாமல் வாழ்ந்தார்கள் எனவே நாமும் அதனை பின்பற்ற வேண்டும்.

English summary
Sapidumpothu Seiyakkoodathavai:சாப்பிடும் போது மறந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள். Spiritually it is said that what manners we should observe while eating and bathing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X