இதெல்லாம் உங்கள் பார்வையில் அடிக்கடி படுதா..கோடீஸ்வர யோகம் உங்கள் வீடு தேடி வரப்போகுதாம்!
சென்னை: கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஏழையாக பிறந்தாலும் நாம் கோடீஸ்வரர் ஆக உயர வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். சில அறிகுறிகள் நீங்கள் பணக்காரர் ஆகப்போகிறீர்கள் என்பதை சில அறிகுறிகள் உணர்த்தும். நம்முடைய வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கிறது என்பதை சில சக்திகள் மட்டுமே உணர்த்தும். எந்தெந்த அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி தென்படுகிறது நீங்கள் கோடீஸ்வரர் ஆக உங்கள் பார்வையில் என்னென்ன பொருட்கள் படும் என்று பார்க்கலாம்.

துளசி செடி மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. உங்கள் வீட்டில் நட்டு வைத்திருக்கும் துளசி செடி நன்கு செழித்து வளரும். துளசியின் வளர்ச்சி அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருளை கொண்டு வரும். தினசரியும் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி வர கோடீஸ்வர யோகம் தேடி வரும். துளசியின் வளர்ச்சியே நல்ல அறிகுறிகளை காட்டிக்கொடுக்கும். வேலையில் புதிய மாற்றம் வரும். சம்பள உயர்வும் தேடி வரும். தொழிலில் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

பல்லி கூறும் ஒலி நிறைய நல்ல சகுனங்களை ஏற்படுத்தும். பல்லிகள் நிறைய இருந்தாலோ.. ஒரே இடத்தில் பல்லிகள் அதிகம் கூடி ஒலி எழுப்பினாலே மகாலட்சுமியின் வரவை குறிக்கும். துளசி மாடத்தில் பல்லிகள் தென்படுவதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வந்து விட்டார் என்பதை உணர்த்தும். நிறைய பண வருமானம் வரப்போகிறது. அதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகப்போகிறீர்கள் என்பதை இந்த அறிகுறிகள் உணர்த்தப்போகிறது.

எறும்புகள் சுறுசுறுப்பின் அடையாளம். நம்முடைய வீட்டில் எறும்புகள் உணவை சுமந்து கொண்டு கூட்டமாக செல்லும் காட்சியை பார்த்தால் உங்கள் வீட்டிற்கு பண வருமானம் அதிகம் வரப்போகிறது என்பதை உணர்த்தும். அந்த எறும்புகள் யாரையும் தொந்தரவு செய்யாது. பிள்ளையார் எறும்பு என்று சொல்வார்கள். சிறிய கருப்பு எறும்பு கூட்டத்தை பார்த்தால் பச்சரிசியை அரைத்து பொடியாக்கி நாம் அந்த எறும்புகளுக்கு உணவாக தர வேண்டும்.
பறவையினங்கள் நம்முடைய வீட்டில் கூடு கட்டுவது நமக்கு நல்ல வருமானம் வரப்போவதை உணர்த்தும். எனவே பறவைகளின் கூட்டினையோ அணில் கட்டும் கூடுகளையோ கலைக்காமல் இருப்பது நல்லது. குருவி கூடுகளை நாம் தொந்தரவு செய்யக்கூடாது.
நம்முடைய பார்வையில் அடிக்கடி ஆந்தைகள் தென்படுவது நல்ல அறிகுறியாகும். ஆந்தை மகாலட்சுமியின் அம்சம். ஆந்தைகளின் பார்வை உங்கள் மீதோ உங்கள் வீட்டின் மீதோ விழுகிறது என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஆந்தையின் சத்தத்தை அடிக்கடி கேட்க நேர்ந்தாலோ அன்னை மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்று அர்த்தம். அதே போல கீரி உங்கள் பார்வையில் அடிக்கடி படும். குபேரரின் வாகனம் கீரி பிள்ளை. உங்கள் வீட்டிற்கு அருகில் கீரியின் வருகை இருந்தாலோ கீரியின் சத்தம் ஒலித்தாலோ
தூக்கத்தில் இருந்து கண் விழிக்கும் நேரத்தில் நம்முடைய உள்ளங்கையில் கண் விழிக்க வேண்டும். மகாலட்சுமி வசிக்கும் இடம் நம்முடைய உள்ளங்களை. நாம் கண் விழிக்கும் போது அதிகாலை நேரத்தில் உங்களுக்கு நல்ல பக்தி பாடல்கள் ஒலி கேட்டாலோ, அல்லது புல்லாங்குழல் ஓசை கேட்டாலோ, சங்கு ஒலிக்கும் சத்தம் கேட்டாலோ..மயிலின் அகவல் சத்தம் கோட்டாலோ, குயிலின் ஓசை கேட்டாலோ அது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். உங்களின் தொழிலில் நீங்கள் செய்திருக்கும் முதலீடுகள் உங்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கும். மங்கல ஒலியை கேட்டாலோ நமக்கும் திடீர் அதிர்ஷ்டம் ஜாக்பாட் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். எனவே நம்முடைய செல்போன் அலாரத்தில் மங்கல ஒலி கேட்கும் வகையில் ரிங்டோன் சத்தம் வைத்துக்கொண்டு உறங்குவது அவசியம்.
பால்காரர் ஊற்றும் பசும்பால் சில நேரங்களில் சிந்தி விடும். அந்த பால் நம்முடைய வீட்டு வாசலில் சிந்த நேரிட்டால் அது தன வரவு வரப்போவதை உணர்த்தும். அதே போல நாம் வெளியில் கிளம்பும் போது உப்பு விற்பனை செய்பவரை எதிரில் காண நேரிட்டாலோ, அல்லது பசு தன்னுடைய கன்றுடன் செல்வதை காண நேரிட்டாலோ அது நல்ல அறிகுறியை உணர்த்தும். அதே போல கால பைரவரின் வாகனமான நாய்கள் நம் கண்களில் படுவது நல்ல சகுனமாகும். அதிர்ஷ்டம் நம்மை தேடி வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
கனவில் அடிக்கடி சங்கு, துடைப்பம் வந்தாலோ மலம் கழிப்பது போலவோ, மலத்தை கனவில் கண்டாலோ பண வரவு அதிகரிக்கப்போகிறது. செல்வ சேர்க்கை அதிகரிக்கப்போகிறது என்று அர்த்தம். ஏதோ வகையில் கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது என்பதை உணர்த்தும் இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு அடிக்கடி தென்பட்டாலும் அன்னை மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று அர்த்தமாகும்.












Click it and Unblock the Notifications