கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டணுமா? வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருள்! நிலைவாசலில் கவனம்
சென்னை: நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும், அதை பெருக்கவும், செல்வத்தை இரட்டிப்பாக்கவும், ஆரோக்கியம் தழைக்கவும், குறிப்பிட்ட சில பொருட்களை தேர்ந்தெடுத்து வைப்பதன் மூலம், மேற்கண்ட அனைத்தையுமே பெற முடியும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
5 முகம் கொண்ட விளக்கில் 5 திரி போட்டு தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதால் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கையாகும். சிவபெருமான் வழிபாட்டினை தொடர்ந்து செய்து வருவதுடன், பஞ்ச பூத தலங்களுக்குச் சென்று வழிபடுவது குடும்பத்துக்கு நன்மைகளை பெற்றுத்தரும்.. வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு விரதமிருந்து வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

நிலைவாசல்: வீட்டின் வாயிலில் எப்போதுமே தூய்மையாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்... மஞ்சள், குங்குமம் தடவி, தோரணங்கள் கட்டி வைத்திருக்க வேண்டும். தோரணங்கள் கட்டிவிட்டால், அவைகளை வாடிவிடாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.
அதேபோல, வாசலில் விநாயகர் சிலை வைக்கலாம்.. மேலும், ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி பூ, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் போன்றவை போட்டு வாசலில் வைக்கலாம்.. ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பு வைப்பதால், எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழையாது.
யானை சிலை: வீட்டிற்குள் மணிபிளான்ட், துளசி, கற்றாழை போன்ற செடிகளை வளர்ததாலும், மீன் தொட்டிகளை வைத்திருந்தாலும, சீன பணத் தவளை அல்லது 3 கால் செல்வத்தேரை என்றழைக்கப்படும் சின்னங்களையும் வைப்பதால் கூடுதல் நன்மைகளை பெறலாம். காற்று மணிகளை கட்டிவிடுவதால், இனிமையான சூழலும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும். அதேபோல, வீட்டில் பித்தளை அல்லது வெள்ளை நிறத்தால் ஆன யானை சிலையை வைப்பதாலும் அதிர்ஷ்டமும், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
வீட்டிலுள்ள பணப் பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கியோ அல்லது நேர்கிழக்கு திசை நோக்கியோ வைக்கலாம்.. எக்காரணம் கொண்டும் தெற்கு திசை நோக்கி வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், நிதிநிலைமை இன்னும் மோசமாகிவிடும். வட கிழக்கு, தென் கிழக்கு திசையில் பண பெட்டியை வைப்பதையும் தவிர்க்கலாம்.
தென்கிழக்கு மூலை: எப்போதுமே வீட்டின் தென்கிழக்கு மூலையில் நீர் தொடர்பான எந்த பொருளையும் வைக்கக்கூடாது.. அதேபோல, வடகிழக்கு திசை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.. இந்த திசை எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வீட்டில் மகிழ்ச்சியும், நிதிநிலைமையும் சீராக இருக்குமாம்.












Click it and Unblock the Notifications