Thai Amavasai 2025: தை அமாவாசை மகத்துவம்.. சுமங்கலிக்கு இந்த புடவை தந்தால் அதிர்ஷ்டம்: பிரபல ஜோதிடர்
சென்னை: நீர் நிலைகள், கடற்பகுதிகளுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே எள்ளு தர்ப்பணம் செய்யலாம் என்றும், காகங்களுக்கு தனித்தனியாக உணவு வைக்காமல், அனைத்து உணவுகளையும் பிசைந்து காகங்களுக்கு வைக்க வேண்டும் என்றும் ஜோதிடர் ஷெல்வி அறிவுறுத்தியிருக்கிறார்.
தை அமாவாசையை முன்னிட்டு, பிரபல ஜோதிடர் ஷெல்வி, வேந்தர் பக்தி என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த வீடியோவில், தை அமாவாசை நாளில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

தை அமாவாசை: "தை அமாவாசையன்று கட்டாயமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.. மற்ற தெய்வங்களை வணங்கிவிட்டு, பெற்றோர் மற்றும் முன்னோர்களை வணங்காவிட்டால், அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்கின்றன சாஸ்திரங்கள்..
எனவே, பெற்றோர் இல்லாதவர்கள் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். நீர்நிலைகளுக்கு செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலேயே எள்ளு தர்ப்பணமும் செய்யலாம்.. பெற்றோருடன் வசிப்பவர்கள் அமாவாசையன்று அன்னதானம் செய்யலாம். அன்னதானம் செய்பவர்கள் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக செய்திட வேண்டும். அன்னதானமாக செய்ய முடியாதவர்கள் ஏழைகளுக்கு அரிசி வாங்கி தரலாம். இவைகளுடன் சிறிது மிளகு சேர்த்து தர வேண்டும்.
முன்னோர்கள் ஆசி: எறும்பு, பசு, காகம், நாய், பூனை ஆகிய ஜீவராசிகளுக்கு அமாவாசையன்று உணவு வைக்க வேண்டும். இப்படி செய்தால் கடவுளின் ஆசியும், முன்னோரின் ஆசியும் கிடைக்கும்.
அதேபோல, தை அமாவாசை நாளில் மாலையில் செய்ய வேண்டியவைகளையும் கட்டாயம் செய்ய வேண்டும். மாலையில் வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வம் படத்துக்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். பிறகு, குலதெய்வத்துக்கு புடவை வைத்து வழிபட்டு, அதனை யாராவது சுமங்கலிக்கு தருவது மிகவும் விசேஷமானது.. ஆனால், இப்படி சுமங்கலிக்கு தரும்போது, வெள்ளி, செவ்வாய்களில் தரக்கூடாது. அன்னதானத்துக்கு மட்டும்தான், நாள், கிழமை கிடையாது. ஆனால் பொருள் தானம் செய்யும்போது, செவ்வாய், வெள்ளியை தவிர்த்து விட வேண்டும்.
அஷ்ட லட்சுமி: தை அமாவாசை நாளின் மாலை நேரங்களில் இப்படி செய்துவந்தால், தடைபட்டு வந்த மங்கள காரியங்கள் இனி இனிதாக நடக்கும்.. வீட்டில் அமைதி ஏற்படும்.. ஒற்றுமை தழைக்கும்.. அஷ்ட லட்சுமியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்..
அமாவாசைக்கு காகத்துக்கு உணவு கட்டாயம் வைக்க வேண்டும். அமாவாசைக்கு மட்டுமல்லாமல், தினமும் காகத்துக்கு உணவு வைக்கலாம்.. அமாவாசை நாளில், இலையில் உணவுகளை தனித்தனியாக வைக்கக்கூடாது. வடை, பாயாசம், அப்பளம் என அனைத்தையும் ஒன்றாக பிசைந்து காகத்துக்கு வைக்க வேண்டும்.
பசுமாடு: அதேபோல, பசுமாட்டுக்கும் உணவளிக்க வேண்டும். பெற்றோர், பெரியோர் இருப்பவர்கள் அகத்திக்கீரையை தரக்கூடாது.. எள்ளு புண்ணாக்கும் பெரியவர்கள் உள்ளவர்கள் தரக்கூடாது. மற்றவர்கள் எள்ளு புண்ணாக்கு தரும்போது, அதனுடன் சிறிது வெல்லம் கலந்து தந்தால், மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்" என்றெல்லாம் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ஷெல்வி.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications