Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை அமாவாசை.. சதுரகிரிக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்கு வனத்துறை சொன்ன குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் நாளை முதல் 4 நாட்கள் அனுமதி அளித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். ஆடி அமாவாசை, தை அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை வணங்குவதற்கு வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர்.

Thai Amavasai: Forest department 4 days permission for devotees to go to Sathuragiri Temple

சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது அகஸ்தியர் நாடி. காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர்.

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.

Thai Amavasai: Forest department 4 days permission for devotees to go to Sathuragiri Temple

சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி. எட்டு ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணமாவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்கிறார், அகஸ்தியர்.

இன்றைக்கும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி வந்து மலையேற சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்து செல்கின்றனர். அமாவாசைக்கு 4 நாட்களும் பவுர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மழை காலங்களில் நீரோடைகளில் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.

Thai Amavasai: Forest department 4 days permission for devotees to go to Sathuragiri Temple

தை அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 22ஆம் தேதி வரைக்கும் சதுரகிரியில் மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், பக்தர்கள் இரவில் மலை மேலே தங்குவதற்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்யலாம். வனத்திற்கோ, விலங்கிற்கோ பாதிப்பு இல்லாமல், எளிதில் தீ பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+