திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்க முடியுமா? இன்று பகல் 12 மணிக்கு ரிசல்ட்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை அருகில் நின்று தரிசனம் செய்யும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில் பங்கேற்க குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவ்வாறு லக்கி டிப்பில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள், 23 ஆம் தேதிக்குள் உரிய கட்டணத்தை செலுத்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ளலாம்.

நீங்கள் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கலுக்கு தேர்வு செய்த போது அதில் ஒரு பதிவு எண் வந்திருக்கும். அதை வைத்து நீங்கள் ஆர்ஜித சேவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த ஆண்டு 2025, ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. பிற தரிசன டிக்கெட்டுகளும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் இன்று அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
இவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களின் பெயர்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். அவர்கள் 23 ஆம் தேதி பகல் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் போதும். அவர்களுக்கான ஆர்ஜித சேவை உறுதியாகும்.அது போல் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளும் வெளியாகிறது. அது போல் மெய் நிகர் சேவை டிக்கெட்டுகள் 22 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ஆன்லைனில் வெளியாகிறது.
அங்கப்பிரதட்சிண டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அது போல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும். அது போல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய் கொண்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் அதே நாளில் மாலை 3 மணிக்கு வெளியாகும்.
எல்லாவற்றை விட முக்கியமாக ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். அது போல் தரிசன டிக்கெட் புக் செய்வதற்களுக்கான அறைகள் ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். செல்போனில் TTD எனும் செயலி மூலமும் புக் செய்யலாம்.












Click it and Unblock the Notifications